எக்சாசெல்சியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சாசெல்சியன்
Hexacelsian
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுBaAl2Si2O8
இனங்காணல்
படிக அமைப்புஅறுகோணம்
மேற்கோள்கள்[1][2]

எக்சாசெல்சியன் (Hexacelsian) என்பது BaAl2Si2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய பேரியம் சிலிக்கேட்டு கனிமமாக கருதப்படுகிறது. இசுரேல் நாட்டின் ஆட்ரூரிம் வடிநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது [1]. இங்குதான் வெப்ப வெளியுரு மாற்ற ஆட்ரூரிய பாறைத் தொகுதிகள் உருவானதாகக் கருதப்படுகிறது [3].

பிற கனிமங்களுடன் தொடர்பு[தொகு]

எக்சாசெல்சியன் என்ற பெயர் செல்சியன் கனிமத்துடன் தொடர்பு கொண்டுள்ளதைக் காட்டுகிறது. செல்சியன் என்பது பெல்ட்சுபார் குழுவைச் சேர்ந்த ஒற்றைச்சரிவச்சுக் கனிமமாகும். எக்சாசெல்சியன் ஒரு பல்லுருத்தோற்ற வகைக் கனிமமாகும். மேலும், இது சிம்ரைட்டு கனிமத்துடன் வேதியல் பண்புகளில் ஒத்திருக்கிறது [4] Beside celsian, it is chemically similar to cymrite.[2].

பன்னாட்டு கனிமவியல் சங்கம் எக்சாசெல்சியன் கனிமத்தை Hcls[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Galuskina, I.O., Galuskin, E.V., Prusik, K., Vapnik, Y., Dzierżanowski, P., and Murashko, M., 2015. Hexacelsian, IMA2015-045. CNMNC Newsletter No. 27, October 2015, 1224; Mineralogical Magazine 79, 1229–1236
  2. 2.0 2.1 "Cymrite: Cymrite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
  3. "Hatrurim (Hatrurim Basin), Negev, Israel - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
  4. "Celsian: Celsian mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாசெல்சியன்&oldid=3937628" இலிருந்து மீள்விக்கப்பட்டது