சிலிக்கான் டெட்ராசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலிக்கான் டெட்ராசைடு
skeletal formula of silicon tetraazide
Space-filling model of the silicon tetraazide molecule
இனங்காட்டிகள்
27890-58-0
InChI
  • InChI=1S/N12Si/c1-5-9-13(10-6-2,11-7-3)12-8-4
    Key: SZJFGTWFLXTOHF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [N-]=[N+]=N[Si](N=[N+]=[N-])(N=[N+]=[N-])N=[N+]=[N-]
பண்புகள்
SiN
12
வாய்ப்பாட்டு எடை 196.1659 g mol−1
தோற்றம் வெண் படிகங்கள்
உருகுநிலை 212 °C (414 °F; 485 K)
வினைபுரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சிலிக்கான் டெட்ராசைடு (Silicon tetraazide) என்பது சிலிக்கான் மற்றும் நைட்ரசன் தனிமங்கள் சேர்ந்து உருவான கனிம வேதியியல் சேர்மமாகும். SiN12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. வெப்பவியல் ரீதியாக நிலைப்புத் தன்மையற்ற இச்சேர்மம் ஓர் இருபடிச் சேர்மமாகக் கருதப்படுகிறது. சிலிக்கான் டெட்ராசைடில் நைட்ரசனின் உள்ளடக்கம் 85.7 சதவீதம் ஆகும். இந்த உயர் ஆற்றல் வேதிச் சேர்மம் தன்னிச்சையாக தீப்பிடித்து எரிகிறது கரைசல் நிலையில் மட்டுமே மட்டுமே இதன் பண்புகளை ஆய்வு செய்யமுடியும் [1][2][3]. எக்சாசிடோ சிலிசைடு [Si(N3)6]2[4] போன்ற ஆறுமடிப்பு ஒருங்கிணைப்புக் கட்டமைப்பில் இருக்கும்போது அல்லது ஒரு இரண்டு நேர்மின் அயனி ஈந்தணைவியாக Si(N3)4L2[2] இருக்கும்போது சிலிக்கான் டெட்ராசைடு நிலைப்புத்தன்மையைப் பெறுகிறது. இந்த படிகத்திண்மங்கள் அறைவெப்பநிலையில் கையாளப்படவேண்டும்.

தயாரிப்பு[தொகு]

சிலிக்கான் டெட்ராகுளோரைடுடன் பென்சீனில் உள்ள சோடியம் அசைடுடன் வினைபுரியச் செய்து மாற்றுவதன் மூலம் சிலிக்கான் டெட்ராசைடு தயாரிக்கப்படுகிறது[1][3].

அறை வெப்பநிலையில் மிகையளவு சோடியம் அசைடு சிலிக்கான் டெட்ராகுளோரைடுடன் வினை புரியும்போது அசிட்டோநைட்ரைல் உருவாகிறது. 2,2-பைபிரிடின் மற்றும் 1,10 பினாந்த்ரோலின் போன்ற ஈந்தணைவிகளை சேர்ப்பதன் மூலம் சோடியம் எக்சாசிடோசிலிசைடு உருவாக்கப்படும் . இவ்வினையின் இறுதியில் சிலிக்கான் டெட்ராசைடு சேர்க்கைப் பொருள் நிலைப்புத்தன்மையுடன் கிடைக்கிறது[2].பிரிடின் மற்றும் டெட்ராமெத்தில் எத்திலீன் டையமீன் போன்ற பிற காரங்கள் எக்சாசிடோசிலிசைடு அயனியுடன் வினைபுரியாது. பிசு (டிரைபீனைல்பாசுப்பினோ)இமினியம்யெக்சாசிடோ ((PPN)2Si(N3)6, [Ph3P=NPPh3][Si(N3)6]) உப்பை பிசு(ட்டிரைபீனைல்பாசுப்பினோ)இமினியமசைடு அணைவு ((PPNN3, [Ph3P=NPPh3]+N3)) உப்பாக மாற்றுவது மற்றொரு தயாரிப்பு முறையாகும். வினைபொருளுடன் அசிட்டோநைட்ரைலில் உள்ள சிலிக்கான் டெட்ராகுளோரைடு சேர்க்கப்படுவதால் இவ்வினை மாற்றம் நிகழ்கிறது[4].

பண்புகள்[தொகு]

சிலிக்கான் டெட்ராசைடு வெள்ளை நிறத்திலுள்ள ஒரு படிகச் சேர்மமாகும். இது 0 ° செல்சியசு வெப்பநிலையில் கூட வெடிக்கும் [1]. தூய சிலிக்கான் டெட்ராசைடு, சிலிக்கான் குளோரைடு டிரையசைடு மற்றும் சிலிக்கான் டைகுளோரைடு டையசைடு போன்ற மாசுகலந்த மாதிரிகள் தெளிவான காரணமின்றி தன்னிச்சையாக வெடிக்கின்றன [5] இச்சேர்மம் எளிதில் நீராற்பகுப்புக்கு உள்ளாகிறது.[3]. டை எத்தில் ஈதர் மற்றும் பென்சீன் போன்ற கரைப்பான்களில் இது கரைகிறது [1].

2,2′-பைபிரிடின் கொண்ட சிலிக்கான் டெட்ராசைடு மிகவும் நிலையானது. 212 பாகை செல்சியசு வெப்பநிலையில் 110 யூல் கிராம் −1 உருகும் என்தால்பி அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறுபாட்டு அலகீடு வெப்ப அளவு முறை இதையே கூர்மையான 265 ° செல்சியசு வெப்பநிலையில் −2400 யூல் கிராம் −1 என்தால்பி என்று கூறுகிறது. 1,10- பினாந்த்ரோலின் சேர்மத்தை கூடுதல் சேர்மமாகப் பெற்றிருந்தாலும் இதே போன்ற முடிவுகள் காணப்படுகின்றன. எமி அசிட்டோநைட்ரைல் கரைப்பான் சேர்ந்த சேர்மம் 100 ° செல்சியசு வெப்பநிலையில் கரைப்பானை வெளியேற்றுகிறது. பின்னர் வேறுபாட்டு அலகீடு வெப்ப முறையில் 240 அளவு முதல் காட்டுகிறது. 2300 யூல் கி −1 என்தால்பி வெப்பத்துடன் ஒரு வெப்ப உமிழ்வினையையும் வெளிப்படுத்துகிறது. சோடியம் அசைடைவிட இவை என்தால்பி அளவுகள் அதிகமாகப் பெற்று - 800 யூல் கிராம்− 1 என்ற அளவில் உள்ளன [6]. ஆனால் −4500 யூல் கி −1 அளவை வெளிப்படுத்தும் ஆர்.டி.எக்சு போன்ற பாரம்பரிய வெடிபொருட்களின் மதிப்புகளை விட இன்னும் குறைவாக உள்ளது[2]. கூடுதல் சேர்மங்கள் கரைசலில் நிலையானவை. அகச்சிவப்பு நிறமாலையியலும் புரோட்டான் அணுக்கரு காந்த ஒத்ததிர்வு தரவுகளும் சிலிக்கான் டெட்ராசைடு மற்றும் 2,2'-பைபிரிடின் அல்லது 1,10-பினாந்த்ரொலினில் எந்தவொரு பிரிகையும் நிகழாது என்று முடிவாகக் கூறுகின்றன. மறுபுறத்தில் பிசு(டிரைபீனைல்பாசுப்பினோ)இமினியம்யெக்சாசிடோசிலிக்கேட்டு உப்பு ((PPN)2Si(N3)6) நிலைப்புத் தன்மையுடன் உள்ளது. இது 214 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. ஒரு வினையில் 250 பாகை செல்சியசு என்ற வேறுபாட்டு அலகீடு வெப்ப முறை அளவை காட்டுகிறது[4]. நிறை நிறமாலை மற்றும் வெப்ப அளவறி பகுப்பாய்வுகளில் நைட்ரசன், சிலிக்கான் டெட்ராசைடு மற்றும் ஐதரசோயிக் அமிலம் போன்றவை விளைபொருட்களாக உருவாகின்றன என்று குறிக்கின்றன[4].

பயன்கள்[தொகு]

அதிக உறுதியற்ற தன்மை காரணமாக தனி சிலிக்கான் டெட்ராசைடு நடைமுறை பயன்பாடுகள் எதற்கும் பயன்படுவதில்லை. கரைசலில் நைட்ரசன் நிறைந்த பொருட்களுக்கான மூலப்பொருளாக இச்சேர்மம் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது[2]. பல் ஒலிபீன்கள் தயாரிப்பதில் வினையாக்கியாக பயன்படுகிறது என ஒரு பயன்பாடு காப்புரிமையை இச்சேர்மம் பெற்றுள்ளது[7]. ஈய அசைடுக்கு மாற்றாக நிலைப்புத்தன்மை மிகுதியான கூட்டுசேர் பொருட்கள் ஆற்றல்மிக்க சேர்மங்களாக செயல்பட முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Wilberg, E.; Michaud, H.: Z. Naturforsch. B 9 (1954) S. 500.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Portius, Peter; Filippou, Alexander C.; Schnakenburg, Gregor; Davis, Martin; Wehrstedt, Klaus-Dieter (2010). "Neutrale Lewis-Basen-Addukte des Siliciumtetraazids". Angewandte Chemie 122 (43): 8185–8189. doi:10.1002/ange.201001826. 
  3. 3.0 3.1 3.2 Gmelins Handbook of Inorganic Chemistry, 8th Edition, Silicon Supplement Volume B4, Springer-Verlag 1989, S. 46.
  4. 4.0 4.1 4.2 4.3 Filippou, Alexander C.; Portius, Peter; Schnakenburg, Gregor (2002). "The Hexaazidosilicate(IV) Ion: Synthesis, Properties, and Molecular Structure". Journal of the American Chemical Society 124 (42): 12396–12397. doi:10.1021/ja0273187. பப்மெட்:12381165. 
  5. Bretherick's Handbook of Reactive Chemical Hazards, 7th revised edition, Academic Press 2006, ISBN 978-0-12-372563-9
  6. T. Grewer: Thermal Hazards of Chemical Reactions, Industrial Safety Series 4, Elsevier 1994.
  7. Nomura, M.; Tomomatsu, R.; Shimazaki, T.: EP 206 034 (1985) pdf-Download
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிக்கான்_டெட்ராசைடு&oldid=2869160" இலிருந்து மீள்விக்கப்பட்டது