சிலந்திக் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ateles|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சிலந்திக் குரங்கு
கருப்புத் தலையுடைய சிலந்திக் குரங்கு (Ateles fusciceps)
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ateles
மாதிரி இனம்
சிமியா பேனிசுகசு
கரோலஸ் லின்னேயஸ், 1758
சிறப்பினம்

See text

Range of the spider monkeys

சிலந்திக் குரங்கு (Spider monkey) நீளமான கை, கால்களையும், இடப் பெயர்ச்சிக்கு ஏற்றவாறு மடக்கக்கூடிய பெரிய வாலையும் மரங்களின் மேல் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளையும் கொண்டுள்ளது. மயிர்த்தோல் சிலந்திக் குரங்கு, சாதாரண சிலந்திக் குரங்கு என இருவகைப்படும்.

மரக் கிளைகளைக் கை, கால், வால் இவற்றால் பற்றியவாறு மரத்திற்கு மரம் தாவிச் செல்லும் திறம் வாய்ந்தது. அரிதாக நிலத்தின் மேல் நடக்கவும், ஓடவும் வல்லது. கூட்டமாக வாழும். பழம், பூச்சி, பறவை முட்டை ஆகியவற்றை உண்கின்றது.பிரேசில் நாட்டுக் காடுகளில் காணப்படுகின்றது.[1]

சிலந்திக் குரங்கு வகைகள்[தொகு]

மயிர்த்தோல் சிலந்திக் குரங்கும் இதன் உறவு முறையாகும். மயிர்த் தோல் சிலந்திக் குரங்கு உருவில் பெருத்தும் நீண்ட நகங்களைப் பெற்றும் காணப்படுவதால் புறத் தோற்றத்தில் பிற குரங்குகளை விட மாறுபட்டுத் தோன்றுகிறது. மயிர்த்தோல் சிலந்திக் குரங்கைப் பிரக்கிளைட்டிஸ் இனத்திலும்,பிற சிலந்திக் குரங்கை அட்டிலின் இனத்திலும் சேர்த்துள்ளனர்.

மயிர்த் தோல் சிலந்திக் குரங்கு[தொகு]

இக்குரங்கு 46-63 செ.மீ உயரமும், 65-80 செ.மீ நீளமும், 10 கி.கிராமுக்கு மேற்பட்ட உடல் எடையும் கொண்டுள்ளது. தட்டையாகவும், மயிரில்லாமலும் அமைந்த முகம் இளஞ்சிவப்பு, கறுப்பு நிறமாக இருக்கும்.[2] மரங்களில் இவ்வகை குரங்கின் இயக்கம் சலனமின்றி நடைபெறுகிறது. இது வாழ்கின்ற அடர்ந்த காடுகளை வேளாண்மைக்காக அழித்து வருவதால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டது. பிரேசில் நாட்டு விலங்குக் காட்சியகங்களில் வளர்க்கப்படும் இதை அந்நாட்டினர் அறியதாகக் கருதிப் பாதுகாக்கின்றனர்.

சாதாரண சிலந்திக் குரங்கு[தொகு]

இது 34-59 செ.மீ உயரமும், 61-92 செ.மீ நீளமும் உடையது. பிற சிலந்திக் குரங்குகள் நான்கு வகைப்படும். மத்திய அமெரிக்க சிலந்திக் குரங்கு, பழுப்புத் தலைச் சிலந்திக் குரங்கு, நீண்ட மயிர்ச் சிலந்திக் குரங்கு, கறுப்பு நிறச் சிலந்திக் குரங்கு என்பன. மரக் கிளைகளைக் கை, கால், வாலால் பற்றிக்கொண்டு ஊஞ்சலாடுவது போல் தாவித்தாவிப் பத்து மீட்டர் தொலைவு வரை செல்லக் கூடியவை. நிலத்தின் மேல் வேகமாக ஓடுகின்றன. அரிதாகவே மரங்களிலிருந்து தரைக்கு இறங்கி வருகின்றன.

பல்வேறு இனங்களைச் சேர்ந்த சிலந்திக் குரங்குகள் ஒரே சூழலில் வாழ நேரிடும்போது தத்தம் இனங்களின் தனித்தன்மைகளை இழக்காமலும், பிறிதோர் இனத்துடன் கலக்காமலும் வாழ்கின்றன. தம் வாழிட எல்லைக்குள் வரும் மனிதனையோ, எதிரியையோ இவை குறைத்தும். உறுமியும் மேல் கிளைகளிலிருந்து வேகமாக இறங்கி வருகின்றன. தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருக்கும். மெதுவாக பேசுவது போல் இரைச்சலும் இடும்.

அச்சமூட்டும் வண்ணமாக முரட்டுத்தனமாக இயங்கியபோதும் உண்மையில் சிலந்திக் குரங்கு வீரமற்றதேயாகும். அச்சமூட்டும் நடவடிக்கைகளெல்லாம் வெறும் நடிப்பேயாகும். சிலந்திக் குரங்கு பழம், பூச்சி, பூச்சிகளின் இன உயிரி, பறவைகளின் முட்டை, மலர் ஆகியவற்றை உண்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Spider monkey". Encyclopædia Britannica Online. (2009). Encyclopædia Britannica, Inc.. 
  2. Cawthon Lang, K.A. (April 10, 2007). "Primate factsheets: black spider monkey (Ateles fusciceps) taxonomy, morphology, and ecology". Wisconsin Primate Research Center (WPRC). பார்க்கப்பட்ட நாள் May 20, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலந்திக்_குரங்கு&oldid=3929929" இலிருந்து மீள்விக்கப்பட்டது