சிறிய மகல்லோவே நதியின் மேற்கு கிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறிய மகல்லோவே நதியின் மேற்கு கிளை (West Branch of the Little Magalloway River) என்பது ஐக்கிய அமெரிக்காவில் வடக்கு நியூ ஆம்ப்சயர் மற்றும் அமெரிக்காவின் வடமேற்கு மேய்னில் அமைந்துள்ள 8.5 கிமீ (5.3 மைல்) நீளம் கொண்ட ஆறு ஆகும்.[1] இது மேய்ன் மற்றும் நியூ ஆம்ப்சயரின் ஆண்ட்ரோஸ்கோகின் ஆற்றின் ஓடை வடிகாலாக அமைந்ததே சிறிய மகல்லோவே நதியின் கிளையாகும். 

மேற்கு கிளையானது நியூ ஆம்ப்சயரில் பிட்சுபர்கில் உள்ள ஸ்டப் குளத்தில் இருந்து (கடல் மட்டத்திலிருந்து 3,480 அடி உயரத்தில்) தோன்றுகிறது. இது பிட்ஸ்பர்க்கில் உள்ள உயரமான மலையான ஸ்டப் மலையின் வடகிழக்கின் அமைந்துள்ள 3,627 அடி பள்ளத்தாக்கிற்கு அருகே உள்ளது. இந்த சிற்றோடை ஸ்டப் மலையின் வடக்கே 1.5 மைல் தூரத்தில் 1,200 அடி நீளமுள்ள ஓடையாக ஓடுகிறது. பின்னர் கிழக்கு நோக்கித் திரும்பி, மேய்னில் நுழைந்து, மற்றொரு இறக்கத்தில் அஜிஸ்கோஹாஸ் ஏரியிலிருந்து வரும் ஓடையுடன் 700 அடிக்கு முன்னர் சிறிய மகல்லோவே சேர்கிறது.

மேற்கோள்கள்[தொகு]