சிறிசு சந்திர நந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிசு சந்திர நந்தி
பிறப்புசிறிசு சந்திர நந்தி
1897
இறப்பு1952
தேசியம்இந்தியன்
பட்டம்மகாராஜா சிறிசு சந்திர நந்தி

மகாராஜா சிறிசு குமார் நந்தி (Maharaja Srish Kumar Nandy) (1897-1952) இவர் கோசிம்பசார் பகுதியின் கடைசி ஜமீந்தாரும், பிரபல எழுத்தாளரும், அரசியல்வாதியும் மற்றும் வங்காளத்தின் நில உரிமையாளருமாவார். இவர் சர் மகாராஜா மணிந்திர சந்திர நந்தியின் மூத்த மகனாவார் [1]

அரசியல் பணி[தொகு]

இவர் 1936 வங்காளத் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பின்னர் வங்காள அரசாங்கத்தில் நீர்ப்பாசனம், தகவல் தொடர்பு மற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அமைச்சராக 1936-1941 ஆண்டுகளில் அபுல் காசெம் பசுலுல் ஹக் அமைச்சரவையில் பணியாற்றினார். [2] [3] இவர் 1924 முதல் வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [4] இவர் ஆரம்பத்தில் இந்து மகாசபையுடன் தொடர்பு கொண்டிருந்தார் [5] [6] ஆனால் பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். [7] [8]

படைப்புகள்[தொகு]

பெங்கால் ரிவர்ஸ் மற்றும் அவர் எகனாமிக்ஸ் வெல்பேர், பிளட் அன்ட் இட்ஸ் ரெமடி , மோனோபதி (மனதைப் பற்றிய ஒரு நோயியல் ஆய்வு) - ஒரு நகைச்சுவை நாடகம், தஸ்யு துஹிதா (இராபரின் மகள்) - ஐந்து பேர் நடிக்கும் ஒரு நாடகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். .

பணிகள்[தொகு]

இவரது தந்தையின் நினைவாக அவர் நிறுவிய மகாராஜா மணிந்திர சந்திர கல்லூரி நினைவுச்சின்னமாக நிற்கிறது. [9] பின்னர், இவர் மகாராஜா சிறிசு சந்திர கல்லூரி என்று அழைக்கப்படும் மற்றொரு நிறுவனத்தை நிறுவி நிதியளித்தார். [10] இவர் உயர் கல்விக்கானப் பள்ளியை நிறுவினார். (எத்தோரா, சலன்பூர் பகுதி, பாசிம் பர்தாமனில் உள்ள எத்தோரா சிறிசு சந்திர நிறுவனம்.)

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிசு_சந்திர_நந்தி&oldid=3708925" இலிருந்து மீள்விக்கப்பட்டது