"தகடூர் யாத்திரை (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
இவ்வுரை நூல்களில் இருந்து பாடல்கள் மட்டுமன்றி இந்நூலின் அமைப்புப் பற்றிய சில தகவல்களும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாகப் பாக்களுக்கு இடையே உரைநடைச் சொற்கள் பயின்றுவருவது குறித்த [[தொல்காப்பியம்|தொல்காப்பியச்]] சூத்திரத்துக்கு விளக்கமளிக்கும்போது எடுத்துக்காட்டுக்காகத் தகடூர் யாத்திரையைக் குறிப்பிட்டுள்ளதால் இந்நூலில் பாடல்களுடன் உரைநடைச் சொற்களும் விரவிக் காணப்பட்டது என்பது பெறப்படுகின்றது. அத்தோடு "பழமையான கதை பொருளாகச் செய்யப்படுவது" என்பதற்கு எடுத்துக் காட்டாகப் பெருந்தேவனாரின் பாரதமும், தகடூர் யாத்திரையும் தொல்காப்பிய உரை நூலில் கூறப்பட்டிருப்பது, முன்னர் நிகழ்ந்து வாய்வழியாக வந்த ஒரு நிகழ்வைப் பிற்காலத்தில் பாடியதே தகடூர் யாத்திரை என்று பொருள்படுவதாகவும், சேரமான், [[அதியமான்]] போர் குறித்த வாய்வழிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் தகடூர் யாத்திரை எழுதப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுவர் இதனை மறுப்போரும் உளர்.
[[பகுப்பு:தமிழ் இலக்கியங்கள்]]
 
 
[[பகுப்பு:தமிழ்சங்க இலக்கியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/630964" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி