புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 10: வரிசை 10:


[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.

== புதுநிலவு வரும் நாள் கணிப்பு ==
இரண்டு புதுநிலவுகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக்காலப்பகுதி, அதாவது ஒரு [[சந்திர மாதம்]] சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. புதுநிலவின் போது நிலவும், கதிரவனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான [[சமன்பாடு]] உண்டு. அது கீழே தரப்படுகிறது.

:'''d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10<sup>-12</sup>) x N<sup>2</sup>'''

இதிலே '''N''' 2000 ஆம் ஆண்டின் முதல் புதுநிலவன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு நிலவு மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். '''d''' 2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த புதுநிலவு வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.


இந்து சமயத்தில் [[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.
இந்து சமயத்தில் [[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.

03:07, 15 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

புதுநிலவின் தோற்றம்

புதுநிலவு, மறைமதி அல்லது அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே புதுநிலவு ஆகும்.[1] இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது கதிரவ மறைப்பு நிகழும்.

29 மார்ச் 2006ல் நிகழ்ந்த முழுக் கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது புதுநிலவின் காட்சி

பொதுவாக புதுநிலவு மிக மெல்லிய பிறை போன்ற தோற்றத்தில் இருக்கும். இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் இதை வெறும் கண்களால் காண இயலாது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டுமே புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.[2]

சந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.

இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரம்

  1. Meeus, Jean (1991). Astronomical Algorithms. Willmann-Bell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-943396-35-2. 
  2. "புது நிலவு (ஆங்கிலத்தில்)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுநிலவு&oldid=2601257" இலிருந்து மீள்விக்கப்பட்டது