கிரைஸ்லர் கட்டிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
செப்பம்
சி (Quick-adding category "ஐக்கிய அமெரிக்க வானளாவிகள்" (using HotCat))
சி (செப்பம்)
[[Image:Chrysler Building by David Shankbone.jpg|thumb|right|கிறிஸ்லெர் கட்டிடம்]]
'''கிறிஸ்லெர் கட்டிடம்''' [[நியூயார்க் நகரம்|நியூயோர்க் நகருக்கு]]த் தனித்துவமான ஒரு அடையாளச் சின்னமாகும். [[1930]]ல் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் 1046 [[அடி]]கள் (319 [[மீட்டர்]]) உயரமானதாகும். [[மான்ஹட்டன்|மான்ஹற்றனின்]] கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் ''கிறிஸ்லெர் கார்ப்பரேஷன்'' நிறுவனத்துக்காகக் கட்டப்பட்ட இது, இப்பொழுது டி.எம்.டப்ளியூ (''TMW'') ரியல் எஸ்டேட் நிறுவனத்தாலும் (75%), திஷ்மான் ஸ்பேயர் ப்ரொப்பர்ட்டீஸ் நிறுவனத்தாலும் (25%) கூட்டாக வாங்கப்பட்டுள்ளது. கிறிஸ்லெர் கட்டிடம், ''வில்லியம் ஹெச் ரெனோல்ட்ஸ்'' என்னும் ஒப்பந்தக்காரருக்காக, [[வில்லியம் வான் அலன்]] என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவ் வடிவமைப்புப் பின்னர் [[வால்டெர் கிறிஸ்லெர்]] என்பவரால் அவரது நிறுவனத்தின் தலைமையகத்துக்காக வாங்கப்பட்டது.
 
 
இக் கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில், உலகின் உயர்ந்த [[வானளாவி]]யெக் கட்டுவது தொடர்பாக, கட்டிடம் கட்டுபவர்களிடையே கடும் போட்டியிருந்தது. கிறிஸ்லெர் கட்டிடம் வாரத்துக்கு 4 தளங்கள் வீதம் கட்டப்பட்டது. இக் கட்டுமானத்தின் போது ஒரு வேலையாள் தானும்கூட பணிக்காலத்தில் இறக்கவில்லை யென்பதும்என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிடம் கட்டிமுடிப்பதற்குச் சற்றுமுன், ஹெச். கிரெய்க் செவெரன்ஸின், 40 வால் தெருவிலுள்ள கட்டிடத்துடன் சம அளவில் இருந்தது. செவெரன்ஸ் அவர்கள் பின்னர் தன்னுடைய கட்டிடத்துக்கு மேலும் இரண்டடி சேர்த்து உயரமாக்கித் தனது கட்டிடமே உலகின் உயரமான கட்டிடம் என்று கூறிக்கொண்டார்.(இது [[ஈபெல் கோபுரம்]] போன்ற "அமைப்பு"க்களை உள்ளடக்கவில்லை.)
 
 
 
[[படிமம்:Chrysler Building Midtown Manhattan New York City 1932.jpg|thumb|left|[[1932]]இல் கிறிஸ்லெர் கட்டிடம்]]
கிரிஸ்லெர் கட்டிடம், [[ஆர்ட் டெக்கோ]] கட்டிடக்கலையின் பிரமிக்கத்தக்க உதாரணமாகும். கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட தனித்துவமான அலங்காரங்கள், கிரிஸ்லெர் [[மோட்டார் வாகனங்கள்|மோட்டார் வாகனங்களில்]] பயன்படுத்திய [[ஹப்கப்]]களின் (''hubcaps'') அடிப்படையில் அமைந்திருந்தது.
 
 
வாயில் மண்டபமும், அதேபோல அழகானது. கட்டிடம் முதலில் திறந்துவைக்கப்பட்டபோது, உச்சியில் ஒரு பொது காட்சிக்கூடம் அமைந்திருந்தது. சில காலங்களின்பின் அது ஒரு உணவகமாக மாற்றப்பட்டது. இவ்விரண்டு முயற்சிகளுமே அக்காலத்தின் பாரிய பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதியடிப்படையில் தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள முடியாமற்போனதால், முந்தைய அவதானிப்புத் தளம் ஒரு தனியார் விடுதியாக (''private club'') மாற்றப்பட்டது. கட்டிடத்தின் உச்சிக்குக் கிட்டவாகவுள்ளஅருகில் உள்ள தளங்கள், ஒடுக்கமானவையாகவும், உயரம் குறைந்த, சரிவான சீலிங்குகளைக் கொண்டனவாகவும் இருந்தன. இவை வெளித் தோற்றத்துக்காகவே வடிவமைக்கப்பட்டவை. உள்ளே இயந்திரங்களும், மின் உபகரணங்களும், வானொலிக்கருவிகளும் வைப்பதற்கே பயன்படக்கூடியவையாக இருந்தன.
 
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/259033" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி