சேசாத்திரி சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 17: வரிசை 17:


==பிறப்பும் இளமையும்==
==பிறப்பும் இளமையும்==
காமகோடி வம்சத்தில் வரதராஜன் - மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் பிறந்தார். சாஸ்திரங்களைக் கற்று வல்லவராக இருந்தார். சேஷாத்ரியின் 14 வயதில் அவருடைய தகப்பனார் இறந்துவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தபோது அவருடைய ஜாகத்தினைக் கணித்தவர்கள், இவர் சன்னியாக மாறி யோகியாகக் கூடியவர் என்றார்கள்.
காமகோடி வம்சத்தில் வரதராஜன் - மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் பிறந்தார். இவர் பிறந்தது சனிக்கிழமை, ஹஸ்த நட்சத்திரமாகும். சாஸ்திரங்களைக் கற்று வல்லவராக இருந்தார். சேஷாத்ரியின் 14 வயதில் அவருடைய தகப்பனார் இறந்துவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தபோது அவருடைய ஜாகத்தினைக் கணித்தவர்கள், இவர் சன்னியாக மாறி யோகியாகக் கூடியவர் என்றார்கள்.


==திருவண்ணாமலை விஜயம்==
==திருவண்ணாமலை விஜயம்==

14:52, 24 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

சேசாத்திரி சுவாமிகள்
சேசாத்திரி சாமிகள் அமர்ந்திருக்கும் படம்
பிறப்பு(1870-01-22)22 சனவரி 1870
தொண்டை மண்டலம்
இறப்பு4 சனவரி 1929(1929-01-04) (அகவை 58)
இயற்பெயர்சேசாத்திரி காமகோடி சாத்திரி

சேசாத்திரி சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1][2] இவர் சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. சேசாத்திரி சுவாமிகளை காஞ்சி காமாட்சியின் அவதாரம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். [3] இவர் தன்னுடைய 19வது வயதில் கிபி 1889ல் திருவண்ணாமலைக்கு வந்தார். அதன்பின்பு திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து மறைந்தார். இவர் இரமண மகரிசி பாதாள லிங்க சந்நதியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது, அவரை மீட்டார்.

பிறப்பும் இளமையும்

காமகோடி வம்சத்தில் வரதராஜன் - மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் பிறந்தார். இவர் பிறந்தது சனிக்கிழமை, ஹஸ்த நட்சத்திரமாகும். சாஸ்திரங்களைக் கற்று வல்லவராக இருந்தார். சேஷாத்ரியின் 14 வயதில் அவருடைய தகப்பனார் இறந்துவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தபோது அவருடைய ஜாகத்தினைக் கணித்தவர்கள், இவர் சன்னியாக மாறி யோகியாகக் கூடியவர் என்றார்கள்.

திருவண்ணாமலை விஜயம்

அவருடைய தாயார் அருணாசல, அருணாசல, அருணாசல என மூன்று முறை கூறிவிட்டு உயர்துறந்தார். இதனால் அண்ணாமலை சேசாத்திரியின் மனதில் ஆழப்பதிந்து திருவண்ணாமலைக்கு வந்தார்,

திருவண்ணாமலையில் வந்து சித்துகளை செய்துகாட்டினார். அவருடைய சித்துகளை அறிந்த மக்கள் அவரிடம் வந்தார்கள். நல்லவர்களுக்கு நல்வாக்கும், தீயவர்களுக்கு கொடுஞ்சொற்களும் கூறினார். மனநிலை சரியில்லாதவர் போல வேகமாக சிரிப்பதும், ஓடுவதும், தன்னைப் பார்க்க வருகின்றவர்களை கட்டியணைத்தல், கன்னத்தில் அறைதல், எச்சில் உமிழ்தல் என செய்வார்.

ரமணரை காப்பாற்றுதல்

ரமண மகரிசி சிறுவயதில், திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் இருந்த பாதாள லிங்க சன்னதியில் தவமிருந்தார். அவரின் ஆழ்ந்த தவம் நீண்ட நாட்களாக இருந்தமையால், அவரைச் சுற்றி பல்லி, பாம்பு போன்ற உயிரினங்கள் அண்டின. பல நாட்களாக உணவும் நீரும் எடுத்துக் கொள்ளாமல் இருந்த ரமணரை சேசாத்திரி சாமிகள் காப்பாற்றி, உலகிற்கு ரமணரை அறிமுகம் செய்தார்.

முக்திடைதல்

கிபி 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் நாள் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி சேசாத்திரி சாமிகளுக்கு அபிசேகம் செய்ய கோரிக்கை வைத்தனர். முதலில் சுவாமிகள் மறுத்தாலும் பின்பு பக்தர்களின் வற்புறுத்துதலால் ஏற்றுக்கொண்டார். பக்தர்கள் பலர் குடம்குடமாக அபிசேகங்களை செய்து அலங்கரித்தனர். அந்த அபிசேகத்தின் குளிர்ச்சியால் சேசாத்திரி சாமிகளுக்கு குளிர் காய்ச்சல் வந்தது. உணவோ, நீரோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். பக்தர்கள் கம்பளி கொடுத்தாளும் போர்த்திக் கொள்ளாமல் இருந்தார். மார்கழி மாதம் 21ம் நாள் முக்தி அடைந்தார்.

சமாதிக் கோயில்

சேசாத்திரி சாமிகளின் சமாதிக் கோயில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரமண மகரிசியின் ஆசிரமத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

நூல்கள்

  • அண்ணாமலையில் ஓர் அன்புத் துறவி(இரமணர் வரலாறு) - சேஷாத்திரி ஸ்வாமிகள் - வனிதா பதிப்பகம்

ஊடகங்களில்

சேசாத்திரி சுவாமிகள் பற்றிய நூல்கள், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவை கீழே பட்டியலிடப்படுகின்றன.


ஆதாரங்கள்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=1807
  2. http://www.maalaisudar.com/staticpage.php?id=46174%20&%20section=5%20&%20catid=13
  3. http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=25693
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேசாத்திரி_சுவாமிகள்&oldid=2109363" இலிருந்து மீள்விக்கப்பட்டது