ஐக்கிய அமெரிக்கப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: sk:Kongres Spojených štátov
சி robot Adding: zh-yue:美國國會
வரிசை 49: வரிசை 49:
[[yi:קאנגרעס]]
[[yi:קאנגרעס]]
[[zh:美国国会]]
[[zh:美国国会]]
[[zh-yue:美國國會]]

21:02, 31 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்றம். சட்டமன்றத்தின் இரு பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரின் நாட்டின் நிலையை கூறும் நாட்டுரையைக் கேட்கிறார்கள்

ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்றம் என்பது மேலவை (செனட்) மற்றும் கீழவை (ஹவுஸ்) என்னும் இரு பிரிவுகள் கொண்ட அமைப்பில் இயங்கும் உறுப்பினர்களைக் கொண்டதாகும். இந்த ஈரவை உறுப்பினர்களையும் கொண்ட கூட்டம் காங்கிரசு எனப்படும். இதுவே ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசின் சட்டமன்றம். இது ஈரவைச் சட்டமனற முறையைக் கொண்டதாகும்.

மக்களின் சார்பாளர்களைக் (பிரதிநிதிகளைக்) கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் அமெரிக்கன் சமோவா, கொலம்பியா மாவட்டம், குவாம், ஐக்கிய அமெரிக்க வர்ஜின் தீவுகள், பியொர்ட்டோ ரிக்கோ, வட மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_அமெரிக்கப்_பேரவை&oldid=160088" இலிருந்து மீள்விக்கப்பட்டது