ஓலி ரோமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,405 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*)
ரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது; [[பிரான்சின் பதினான்காம் லூயி|லூயி XIV]] மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் [[வெர்சாய் அரண்மனை]]யின் அழகான [[நீர்த்தாரைகள்|நீர்த்தாமரைகளை]] வடிவமைப்பதிலும் பங்கேற்றார்.
 
1681இல் ரோமர் டென்மார்க்கிற்கு திரும்பினார். கோபனாவன் பல்கலைக்கழகத்தில் [[வானியல்]] பேராசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் தமது வழிகாட்டி பார்த்தோலினின் மகள், ஆன் மாரி பார்தோலினைத் திருமணம் செய்துகொண்டார். வானியல் பார்வையாளராக துடிப்பாக செயலாற்றினார்; பல்கலைக்கழகத்தில் இருந்த ''ருண்டெடாம்'', அல்லது வட்டக் கோபுரத்திலிருந்த ஆய்வகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தமது கவனிப்புகளை தொடர்ந்தார். தமக்கான பொறிகளை தாமே வடிவமைத்து உருவாக்கிக்கொண்டார். ஆனால், அவரது குறிப்புகள் யாவும் 1728ஆம் ஆண்டின் கோபனாவன் தீவிபத்தில் அழிந்துபட்டன. இருப்பினும் அவரது முன்னாள் உதவியாளரான (பின்னாளில் தாமே ஒரு வானியலாளர்) பெடர் ஹொர்ரெபோ இவற்றை விவரித்து எழுதினார்.
 
அரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683இல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698இல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே; 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ)
 
1700இல் ரோமர் டென்மார்க்கு-நோர்வேயில் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார்; முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக [[டைக்கோ பிரா]] எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:வானியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் அறிவியலர்]]
29,830

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439010" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி