மாவீரர் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pl:Dzień Męczenników
சி தானியங்கி அழிப்பு: en:Martyrs' Day (disambiguation) (strong connection between (2) ta:மாவீரர் நாள் and w:Martyrs' Day)
வரிசை 13: வரிசை 13:
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]


[[en:Martyrs' Day (disambiguation)]]
[[pl:Dzień Męczenników]]
[[pl:Dzień Męczenników]]

14:35, 22 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மாவீரர் நாள் என்பது தாய்/தந்தை நாட்டின் விடுதலைக்காகப் போராடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள் ஆகும். இது உலகின் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டு வீரர்களுக்காக நினைவு கூரப்படுகிறது. ஒவ்வொரு நாட்டவரும் தத்தமக்கென ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து அந்த நாளை மாவீரர் நாளாகப் பிரகடனம் செய்து இந்த அஞ்சலியைச் செய்வார்கள். குறிப்பிட்ட சில நாடுகளில் அந்த நாள் விடுமுறை நாளாகக் கூடப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத்தில் மாவீரர் நாள்

தமீழீழத்தில் மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், புலகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 இல் பிரகடனம் செய்யப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூறும் நாள்கள்க்கு மாவீரர் நாள் ஒத்தது. ஈழத் தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.

ஏனைய நாடுகளில் மாவீரர் நாள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவீரர்_நாள்&oldid=1304607" இலிருந்து மீள்விக்கப்பட்டது