சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, தமிழ்நாடு அரசின் பல்வேறு சமுக நல அறிவிப்புகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் ஏற்படுத்தப்பட்டது.

வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள், மற்றும் கட்டமைப்புப் போன்ற முக்கிய துறைகளின் சீரான திட்டமிடப்பட்ட, நீடித்த வளர்ச்சியினை அடைய இத்துறை தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயலாற்றும்.

இத்துறையானது, அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் பெற, குறிப்பாக ஏழைகள் மற்றும் மகளிர் பயனுறும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

துறையின் பணிகள்[தொகு]

1.தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்தல்.

2.கள ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் குறித்த காலங்களில் மாவட்ட அளவில் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்தாய்வுகள் நடத்துதல்.

3.சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அலுவலர்களை, களப்பணி ஆய்வுகளை அடிக்கடி மேற்கொள்ளச் செய்து, திட்டங்களின் தரம் மற்றும் திறன் விவரங்களை ஆராய்ந்து அவை குறித்த கருத்துக்களை அரசிற்கு இத்துறை அளிக்கும். மேலும், திட்டங்களின் செயலாக்கத்தைச் செம்மைப்படுத்தி, மேம்படுத்தும் வழிமுறைகளை, தேவைப்படும்போது அரசிற்கு இத்துறை பரிந்துரைக்கும். இத்துறை, பிற துறைகளுடன் இணைந்து செயலாற்றுவதுடன், கள ஆய்வு விவரங்களின் அடிப்படையில், திட்டங்களில் எதிர்பார்க்கப்படும் பயன்களைப் பெற, உரிய கொள்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கான தக்க பரிந்துரைகளை வழங்கும்.

4.அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செவ்வனே செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பாக இத்துறை செவ்வனே செயல்படும்.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]