சிர்னாபள்ளி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிர்னபள்ளி அருவி (Sirnapally Waterfalls), ஜானகி பாய் அருவி அல்லது தெலங்காணா நயாகரா அருவி என்பது தெலங்காணா மாநிலம் இந்தல்வாய் மண்டலத்தில் உள்ள சிர்னபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருவியாகும்.[1] இது நிஜாமாபாத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

சீரானப்பள்ளி ராணி அல்லது சீலம் ஜானகி பாய் சிரானப்பள்ளி வம்சத்தைச் சேர்ந்த ஒரு நிலப்பிரபுக் குடும்பம் மற்றும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை வைத்திருந்தார். ராமடுகு திட்டத்தில் பாயும் குளத்தை சீலம் ஜானகி கட்டினார். குடிநீருக்காக மஞ்சிப்பா செருவு (குளம்) உட்படப் பல குளங்களை இவர் தோற்றுவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்னாபள்ளி_அருவி&oldid=3784100" இருந்து மீள்விக்கப்பட்டது