சிரோ இசை விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரோ இசை விழா என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சிரோ பள்ளத்தாக்கில் நடைபெறும் ஒரு திறந்தவெளி இசைவிழாவாகும். இது இந்தியாவின் சுதந்திரமான இசைப்பிரிவின் இசைக்கலைஞர்களின் திறனை வெளிப்படுத்துகிறது, 2012 ம் ஆண்டில் இசைக்கலைஞர்களான பாபி ஹானோ மற்றும் மென்வோபாஸ், கிதார் கலைஞர் அனுப் குட்டி ஆகியோரால் தொடங்கப்பட்டது., மேலும் லீ ரனால்டோ, ஸ்டீவ் ஷெல்லி, டாமோ சுஸுகி, ஷை பென் ட்ஸூர், மோனோ, டிவைன், லூவ் மஜாவ், ஷாயிர் என் ஃபங்க், இண்டஸ் க்ரீட் , பீட்டர் கேட் இசைப்பதிவு நிறுவனம், மென்வோபாஸ், குரு ரேவ்பென் மஷங்வா மற்றும் பார்மர் பாய்ஸ் மற்றும் பல இசைக்கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து இசைநிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த திருவிழா நான்கு நாட்களுக்கு நடைபெறும் மேலும் சிரோவில் உள்ள அபதானி மக்களால் நடத்தப்படுகிறது.

திருவிழா மைதானம்[தொகு]

இந்த திருவிழாவின் அரங்க கட்டமைப்பிற்காக உள்நாட்டில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே  பயன்படுத்தி, இந்தியாவில் நடைபெறும் சூழல் நட்பு விழாக்களில் ஒன்றாக சிரோ விழா கவனிக்கப்படுகிறது.

இந்த திருவிழாவானது பூஜ்ஜிய நெகிழி என்ற கொள்கையைக் கொண்டுள்ளது மேலும் எந்த கழிவுகளையும் பொறுப்பில்லாமல் விசிறியடிக்காமல் பார்வையாளர்களை பொறுப்பேற்க ஊக்குவிக்கிறது

டோனி (சூரியன்) மற்றும் போலோ (சந்திரன்) ஆகிய இரண்டு மேடைகளைக் கொண்டுள்ளது, இந்த மேடைகள் முழுக்க முழுக்க மூங்கில்களைக் கொண்டு உள்ளூர் கைவினைஞர்களால் கட்டப்பட்டது. இந்த விழாமேடை அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடியினரிடையே நிலவும் டோனி போலோ என்ற ஆன்மீக நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு அமைக்கப்பட்டது..

இசை[தொகு]

சிரோ இசை விழா, இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் இசைக்கப்படும் இண்டி சுதந்திர நாட்டுப்புற இசை முதல் பல்வேறு வெளிநாட்டு இசைவகைகளைக் கொண்ட பரவலான இசை வகைகளை சர்வதேச கலைஞர்கள் அடங்கிய குழுக்களைக் கொண்டு வழங்குகிறது. சர்வதேச விருந்தினர்கள், இசைக்குழுக்கள், கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் பெரும் ஈடுபாட்டுடன்,சிரோ இசை விழா சமகால இசை விழாவாக வகைப்படுத்தப்பட்டாலும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களால் இந்திய அபதானி பழங்குடி மக்களின் பாரம்பரிய இசையின் பரந்த பிரிவை முக்கியமாக கொள்ள உறுதி கொண்டுள்ளது.

பயணம்[தொகு]

சிரோ இசை விழாவிற்கு வருகை தரும் பயணமே சாகசமிக்கது. ஏனெனில் சிரோ, அருணாச்சல பிரதேசத்திற்கு நேரடியாக எந்த விமான சேவைகளும் இல்லை. அதன் அருகிலுள்ள விமான நிலையம் சுமார் 140 கிமீ தொலைவிலுள்ள வடக்கு லக்கிம்பூர் அஸ்ஸாமில் உள்ளது, அதற்கடுத்த அருகாமை விமான நிலையம் சிரோ பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள அஸ்ஸாமின் திப்ருகர் ஆகும். குவஹாத்தியில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் நாகார்லாகுனுக்கு இரவு நேர இரயில் ஒன்று உள்ளது. அங்கிருந்து சிரோவுக்கு 3 மணி நேரமாக மகிழுந்தில் பயணம் செய்தால் சிரோவை வந்தடையலாம். வடக்கு லக்கிம்பூரில் இருந்து இரவு  தொடருந்து அல்லது பேருந்தில் சிரோவிற்கு வரலாம் அல்லது பகிர்வு அடிப்படையில் ஏதேனும் ஒரு மகிழுந்தினை தேர்வு செய்து பயணிக்கலாம். இவ்வாறு சிரோவுக்கு வந்து சேரவே நான்கு முதல் ஐந்து மணிநேர சாலைப்பயணம் செய்யவேண்டும். இவ்வாறாக சாகச பயணம் செய்தே இவ்விழாவிற்கு வர வேண்டும்.

சிரோ இசை விழாவிற்கான சம்பிரதாயங்கள்[தொகு]

சிரோ இசை விழாவிற்கான நுழைவுச் சீட்டுகள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன. அருணாச்சலி அல்லாத இந்தியர்கள் அனைவருக்கும் [1] உள்நாட்டு அனுமதியும், வெளிநாட்டினருக்கோ அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைய பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதியும் அவசியமாகும். இந்த அனுமதிகள் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள மாநில சுற்றுலா அலுவலகங்களில் கிடைக்கும். பங்கேற்பாளர்கள் அவற்றை நேரடியாக ஆனால், முன்கூட்டியே சென்றடைந்தால் மட்டுமே வாங்கலாம், சிரோ பள்ளத்தாக்கிற்குச் செல்ல சில அரசாங்க நுழைவு அனுமதிகளும் உள்ளன. இந்த அனுமதிகளை டெல்லி, கவுகாத்தி மற்றும் தேஜ்பூரில் உள்ள மாநில அலுவலகங்களில் இருந்து பெறலாம். இதுபோன்ற அனைத்து சவால்களையும் தாண்டி சென்றால் மட்டுமே இவ்விழாவில் பங்குகொண்டு இசைவிருந்தினை கண்டு கேட்டு மகிழ முடியும்..

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரோ_இசை_விழா&oldid=3669874" இலிருந்து மீள்விக்கப்பட்டது