சிரேயசு தள்பதே
சிரேயாசு தள்படே | |
---|---|
2007 இல் தள்படே | |
பிறப்பு | சனவரி 27, 1976 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 2002 - இன்று |
சிரேயசு தள்பதே (Shreyas Talpade, சிரேயாஸ் தள்படே, மராத்தி: श्रेयस तळपदे, பிறப்பு: சனவரி 27, 1976) மராட்டியிலும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தள்பதே மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் ஒரு மராட்டிய குடும்பத்தில் பிறந்தார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]தள்பதே தனது நடிப்பு வாழ்க்கையை மராத்தி தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் தோன்றியதிலிருந்து தொடங்கினார். அத்துடன் அவர் மகாராட்டிரா முழுவதும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் "சீ டிவி சோப் ஓப்பரா வோஃகு" (1997) தொடரில் முன்னணிப் பாத்திரத்தில் நடித்தார். "டாமினி" என்ற பிரபலமான மராத்தி தொடரில் அவரது பாத்திரமான "தேச்சாசு" மராத்திய நேயர்களிடையே மிகுந்த வரவேற்புடன் இருந்தது. அவர் நாகேசு குகுனூரின் இக்பால் திரைப்படம் வழியாக பாலிவுட்டில் அறிமுகமானார். அதில் அவர் கிரிக்கெட் வீரராகும் இலட்சியத்தைக் கொண்ட காதுகேளாத இளைஞராக நடித்தார். அந்தத் திரைப்படமும் அவரது நடிப்பும் இரசிகர்களாலும் விமர்சகர்களாலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.[1] நாகேசு குகுனூரின் டோர் அவரது அடுத்த படமாக இருந்தது. அதில் அவர் பல மாறுவேடங்களைப் போடும் பெஃகுரூபியா என்ற நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.[2]
2006 ஆம் ஆண்டில் அப்னா சப்னா மனி மனி என்ற நகைச்சுவைத் திரைப்படத்திலும் நடித்தார். மேலும் 2007 ஆம் ஆண்டில் அவர் பராஃகு கானின் ஓம் சாந்தி ஓம் என்ற மிகப் பெரிய வெற்றித் திரைப்படத்தில் சாருக்கான் உடன் இணைந்து நடித்தார். அதில் அவர் பப்பு மாஸ்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் அவர் நாகேசு குகுனூரின் பாம்பே டூ பேங்காக் என்ற மாறுபட்ட கலாச்சார நகைச்சுவைத் திரைப்படத்தில் தோன்றினார். அவர் சனாய் சௌக்ஃகாடே என்ற மராத்தியத் திரைப்படத்தையும் தயாரித்தார். அப்படம் அதே ஆண்டில் வெளியானது. சியாம் பெனகலின் வெல்கம் டூ சச்சன்பூர் , கோல்மால் ரிட்டன்சு மற்றும் சங்கீத் சிவனின் திகில் படமான கிளிக் ஆகியவை அவரது மிகவும் அண்மைய திரைப்படங்கள் ஆகும்.[3][4]
திரைப்பட விவரங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | இதரக் குறிப்புகள் |
---|---|---|---|
2002 | ஆன்கேன் | செய்வாலா | கேமியோ |
2004 | பச்சாத்லேலா | ரவி | மராத்தி திரைப்படம் |
2005 | இக்பால் | இக்பால் | |
த ஃகேங்மேன் | கணேஷ் | பரிந்துரை - சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது | |
ரேவதி | |||
2006 | ஆய் ஷப்பாத்..! | மராத்தி திரைப்படம் | |
அப்னா அப்னா மணி மணி | அர்ஜூன் பெர்னாண்டஸ் | ||
டோர் | பெஃகுரூபியா | ||
2007 | ஆக்கர் | டாக்டர். ஆதி மெர்சண்ட் | |
தில் தோஸ்தி எக்ஸட்ரா | சஞ்செய் மிச்ரா | ||
ஓம் சாந்தி ஓம் | பப்பு மாஸ்டர் | ||
2008 | பாம்பே டூ பேங்காக் | சங்கர் | |
தசாவதார் | நாரத் (குரல்) | அனிமேஷன் | |
வெல்கம் டூ சச்சன்பூர் | மகாதேவ் | ||
கோல்மால் ரிட்டன்ஸ் | லகட்சுமன் | ||
சனாய் சௌக்ஃகாடே | மராத்தி திரைப்படம் | ||
2009 | பேயிங் கெஸ்ட் | பஃகவேச் | |
கூக் யா குரூக் | படப்பிடிப்பில் | ||
ஆசாயேயின் | அவராகவே | சிறப்புத் தோற்றம் | |
ஆகே சே ரைட் | தினகர் வாக்மேர் | 4 செப்டம்பர் 2009 அன்று வெளியிடப்பட்டது | |
2010 | கிளிக் (2010 திரைப்படம்) | ஆவி | |
சீசன்ஸ் கிரீட்டிங்க்ஸ் (2009 திரைப்படம்) | தயாரிப்பில் உள்ளது |
விருதுகள்
[தொகு]- 2006: வெற்றி - ஜீ சினி கிரிட்டிக்ஸ் விருது - சிறந்த நடிகர் - இக்பால்
- 2007: வெற்றி - சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது - டோர்
- 2008: வெற்றி - சிறந்த தடைகளற்ற நடிப்புக்கான ஸ்டார்டஸ்ட் விருது (ஆண்) - ஓம் சாந்தி ஓம்
- 2008:பரிந்துரை :சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது-ஓம் சாந்தி ஓம்
குறிப்புதவிகள்
[தொகு]- ↑ rediff.com: அட் ஃகோம் வித் சிரேயசு தள்படே
- ↑ சிரேயசு தள்படே ஆன் டோர்
- ↑ டெக்கான் ஹெரால்டு - பிலிம்சு, ஃபேம், எக்ஸ்ட்ரா
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-12-29. பார்க்கப்பட்ட நாள் 2010-06-10.