சியாமளா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாமளா குமாரி
தேசியம்இந்தியர்
பணிசுவரோவியக் கலைஞர்
அறியப்படுவதுகேரள கோயில்களின் சுவரோவியக்கலையை மீட்டெடுத்தல் & பாதுகாத்தல்
வாழ்க்கைத்
துணை
ஜி. ஆழிக்கோடு

சியாமளா குமாரி (Syamala Kumari) இந்தியக் கோவில்களில் ஓவியம் வரைபவர் என அறியப்படுகிறார். கேரள கோயில்களின் சுவரோவியக்கலையை மீட்டெடுத்தல் & பாதுகாத்தல் பணியை இவர் மேற்கொண்டு வருகிறார். இது பாரம்பரியமாக ஆண்களால் மேற்கொள்ளப்படும் தொழிலாக உள்ளது. கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோயிலில் ஓவியம் வரைவது இவரது முக்கிய பணி ஆகும். இவரது பணியைப் பாராட்டி இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை[தொகு]

கேரளாவில் உள்ள கோவில்களில் சுவரோவியக் கலைஞராக பணியாற்றிய முதல் பெண் இவர்தான் என்று அறியப்படுகிறது. [1] இவர், மில்லினியத்தின் தொடக்கத்தில் சுவரோவிய ஓவியங்களில் ஆர்வம் பெற்றார். இவர் கேரளாவில் உள்ள கோவில்களில் ஓவியம் வரைவதோடு அல்லாமல், கோவில் சுவர்களில் இருக்கும் பாரம்பரிய சுவரோவியக் கலையை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் உதவியுள்ளார்.

பணிகள்[தொகு]

சியாமளா குமாரி ஆவணப்படங்களையும் உருவாக்கியுள்ளார். [2] நவராத்திரி மண்டபம் மற்றும் பத்மநாபசாமி கோயிலில் இவரது கணவர் ஜி. ஆழிக்கோடு உதவியுடன் ஓவியங்களை வரைந்துள்ளார்.[3]

சியாமளா குமாரி 2018 இல் நாரி சக்தி விருது பெறுகிறார்

சியாமளாகுமாரி, தனது சுவரோவியங்களை விற்பனையும் செய்கிறார். இவரது சுவரோவியங்களை விரும்பும் நபர்கள், ஓவியத்திற்கான கருத்தையும், சுவரோவியத்தின் அளவையும் குறிப்பிடுகின்றனர். இவர், ஓவியத்தின் உயரம் மற்றும் அகலத்தைக் கருத்தில் கொண்டு, வடிவமைப்பை வரைகிறார். பின்னர் வண்ணங்கள் பயன்படுத்தப்படும், இது படிப்படியாக முடிக்கப்பட்ட சுவரோவியத்தை உருவாக்குகிறது. இப்பணியை இவர், தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து ஈடுபாட்டுடன் செய்கின்றார். சுவரோவியங்களைத் தவிர, மட்பாண்டங்கள் மற்றும் மூங்கில் போன்றவற்றில் செய்யப்படும் பொருட்களுக்கு தனது ஓவியத்தின் மூலமாக மெருகேற்றி விற்பனை செய்கிறார்.[3] இதைத் தவிர கேரளாவின் முக்கிய ஊர்களில் தனது பொருட்களைக் கொண்டு சென்று விற்பனையும் செய்கிறார்.

விருது[தொகு]

புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ( குடியரசுத் தலைவர் இல்லத்தில் ) இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், 2018 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கி கௌரவித்தார்.[4] இவருடன், கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானி லிசிமோல் பிலிபோஸ் மற்றும் விலங்கியல் நிபுணர் எம். எஸ். சுனில் ஆகியோரும் விருது வென்றவர்கள் ஆவர். [5] அன்றைய தினம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். இந்த நிகழ்ச்சியில், சுமார் 30 பேர் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, விருதையும் ரூபாய் 100,000 பரிசையும் பெற்றன.[6]

குறிப்புகள்[தொகு]

  1. "International Women's Day: President Kovind honours 39 achievers with 'Nari Shakti Puraskar'". பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
  2. "Nari Shatki Puraskar citation". பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
  3. 3.0 3.1 Staff Reporter (2012-08-21). "A fair that holds a surprise" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/a-fair-that-holds-a-surprise/article3799797.ece. 
  4. "Nari Shakti Puraskar - Gallery". பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  5. "Scientist, social worker and mural artist: Meet Nari Shakti winners from Kerala". https://www.thenewsminute.com/article/scientist-social-worker-and-mural-artist-meet-nari-shakti-winners-kerala-77643. 
  6. "On International Women's Day, the President conferred the prestigious Nari Shakti Puraskars to 30 eminent women and 9 distinguished Institutions for the year 2017". பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாமளா_குமாரி&oldid=3902750" இலிருந்து மீள்விக்கப்பட்டது