சிம்பாப்வெயிட்டு
Appearance
சிம்பாப்வெயிட்டு Zimbabweite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | (Na,K)2PbAs4(Nb,Ta,Ti)4O18 |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சள், மஞ்சள் பழுப்பு |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மிளிர்வு | அடமன்டைன் |
மேற்கோள்கள் | [1] |
சிம்பாப்வெயிட்டு (Zimbabweite) என்பது (Na,K)2PbAs4(Nb,Ta,Ti)4O18 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பொதுவாக ஆர்சனைட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்பட்டாலும் இதில் நையோபியம் மற்றும் தாண்டலம் தனிமங்களும் கலந்துள்ளன. மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும் இக்கனிமம் செஞ்சாய்சதுர வடிவில் படிகமாகிறது. மோவின் அளவுகோலில் சிம்பாப்வெயிட்டின் கடினத்தன்மை மதிப்பு 5 ஆகும். 1986 ஆம் ஆண்டு சிம்பாப்வே நாட்டில் வானிலையால் பாதிக்கப்பட்ட களிமண்ணால் உருவாகிய வெண்களிமண் தீப்பாறைகளில் சிம்பாப்வெயிட்டு கண்டறியப்பட்டது [1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 http://www.mindat.org/min-4403.html Mindat