சிம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிம்பா (Simba) என்பது ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் ஆகும். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்த வரைகலைப் படமான தி லயன் கிங் திரைப்படத்தில் இக்கதாப்பாத்திரம் தோன்றியது. இத்திரைப்படம் 1994 ஆம் ஆண்டில் வெளியானது. இதைத்தொடந்து தி லயன் கிங் II (The Lion King II), சிம்பாஸ் ப்ரைடு (Simba's Pride) மற்றும் தி லயன் கிங் 1½ (The Lion King 1½) ஆகிய திரைப்படங்களிலும் இக்கற்பனைக் கதாப்பாத்திரம் தோன்றியது. சிம்பாவை, திரைக்கதை எழுத்தாளர்கள் ஐரீன் மெச்சி (Irene Mecchi), ஜொனத்தன் ராபர்ட்ஸ் (Jonathan Roberts) மற்றும் லிண்டா ஊல்வர்ட்டன் (Linda Woolverton) ஆகியோர் உருவாக்கினர். வரைகலையாக இளவயது சிம்பாவை மார்க் ஹென் (Mark Henn) உருவாக்கினார். நடுத்தர வயது சிம்வாவினை ரூபன் எ. அகியூனோ (Ruben A. Aquino) உருவாக்கினார். சிம்பாவானது வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பாம்பி கதாப்பாத்திரத்தின் பாதிப்பில் உருவாக்கப்பட்டதாகும். மேலும் விவிலியத்தின் ஜோசப் மற்றும் மோசஸ் ஆகியவற்றின் பாதிப்பினையும் கொண்டது.

உருவாக்கம்[தொகு]

மேத்யூ ப்ராட்ரிக்

தி லயன் கிங் திரைப்படத்திற்கான யோசனை முதலில் டிஸ்னியின் தலைவர் ஜெப்ரி கேட்ஸ்னப்ர்க்கிற்கு (Jeffrey Katzenberg) 1989 ஆம் ஆண்டில் தோன்றியது.[1] அதற்கான தலைப்பாக முதலில் கிங் ஆப் தி ஜங்கிள் என்பதைத் தேர்வு செய்திருந்தார். நடுத்தர வயதுடைய சிம்பாவிற்கு மேத்யூ ப்ராட்ரிக் (Matthew Broderick) குரல் கொடுத்திருந்தார்.[2] அவர் அயர்லாந்தில் விடுமுறையில் இருந்தபோது அவரது முகவர் சிம்பாவிற்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்ததை அவரிடம் சொன்னார். இயக்குனர்கள் இவரது குரல் சிம்பா கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என முடிவெடுத்தனர்.

வரைகலை[தொகு]

வால்ட் டிஸ்னி நிறுவனம் அதே நேரத்தில் போச்சோந்தாஸ் (Pocahontas) எனும் வரைகலைப் படத்தினையும் தயாரித்துக் கொண்டிருந்ததால் அதன் ஊழியர்களை இரண்டாகப் பிரித்தது. அதில் ஒரு பிரிவினர் தி லயன் கிங் படத்திற்கான வரைகலையில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலோனர் அதிக அளவு வரைகலை அனுபவம் இல்லாதவர்கள் ஆவார்.[3] இணை இயக்குனநர் ரோப் மின்காஃப் (Rob Minkoff) இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பலருக்கு வரைகலைக் கண்காணிப்புப் பதவியை வழங்கினார்.[4] மேலும் டிஸ்னி நிறுவன ஊழியர்கள் போச்சோந்தாஸ் (Pocahontas) வரைகலைப் படமே நன்றாக மக்களிடம் வரவேற்பினைப் பெறும் என்றும் எண்ணினர். வரைகலைப் பணியினை மார்க் ஹென் (Mark Henn) மற்றும் ரூபன் அகினோ (Ruben A. Aquino) மேற்கொண்டனர். இதில் மார்க் ஹென் இளவயது குட்டி சிம்பா வரைகலை உருவாக்கத்தினையும் ரூபன் அகினோ நடுத்தர வயது சிம்பாவின் உருவாக்கத்தினையும் செய்தனர். டிஸ்னி நிறுவனத்தின் ராபின் ஹூட் வரைகலைப் படத்திற்குப் பின்னர் மனிதர்களே தோன்றான வரைகலைப் படம் 'தி லயன் கிங்' ஆகும். எனவே ஒருகால் மனிதர்களை வரைகலையில் உருவாக்குவதைவிட மிகச் சிரமமானது நான்கு கால் விலங்குகளை வரைகலைகளில் உருவாக்குவது என ரூபன் அகினோ தெரிவித்தார்.

தாக்கமும் பிரபலமும்[தொகு]

பிரபல இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் தனது புதுக் குழந்தையை தங்கியிருந்த விடுதியின் உப்பரிகையிலிருந்து கீழே குழுமியிருந்த ரசிகர்களிடம் காட்டியது, 'லயன் கிங்' வரைகலைப் படத்தில் புதிதாகப் பிறந்த குட்டியான சிம்பாவை பாறை உச்சி நுனியியிருந்து கீழே குழுமியிருந்த பிற விலங்குகளியே காட்டியதைப் போன்றது என கருதப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Beck, Jerry (2005-10-28). The Lion King. United States: Chicago Review Press (published October 1, 2005). பக். 145–146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1556525915. https://books.google.com/?id=fTI1yeZd-tkC&pg=PA145&lpg=PA145&dq=ruben+a.+aquino+the+lion+king+interview#v=onepage&q=ruben%20a.%20aquino%20the%20lion%20king%20interview&f=false. பார்த்த நாள்: 25 July 2013. 
  2. Daly, Steve (July 8, 1994). "Mane Attraction". Entertainment Weekly. Entertainment Weekly Inc. 27 அக்டோபர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. King, Susan (September 15, 2011). "A 'Lion's' tale". Los Angeles Times. Los Angeles Times. 27 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Roger Allers & Rob Minkoff Interview". Movie Muser. Muser Media. 2011. 17 November 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. Vineyard, Jennifer (November 20, 2002). "Michael Jackson Calls Baby-Dangling Incident A 'Terrible Mistake'". MTV. Viacom International Inc. 28 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பா&oldid=3586932" இருந்து மீள்விக்கப்பட்டது