சிம்கிகா
சிம்கிகா | |
---|---|
சிம்கிகா மற்றும் சுரசாவை அனுமன் கொல்லும் காட்சி. | |
வகை | அரக்கர் |
நூல்கள் | இராமாயணம் |
சிம்கிகா ( Simhika ) இந்து சமயத்தில் இவர் ஒரு அரக்கியாகச் சித்தரிக்கப்படுகிறார். இராமாயண காப்பியத்தில், சுந்தர காண்டம் என்னும் பகுதியில் அனுமன் இலங்கை செல்வதற்காக கடலைக் கடக்கும் போது, அவரின் பயணத்தை தடை செய்யும் பொருட்டு, எதிரியாகத் தோன்றி அனுமனால் கொல்லப்படுகிறார் என்று இவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]
வரலாறு
[தொகு]இராமாயணத்தில், அனுமன், அரக்க - அரசனான இராவணனின் இராச்சியமான இலங்கை செல்வதற்காக, சமுத்திரத்தை கடக்கும் சமயத்தில், மைனகா மற்றும் சுரசாவை சந்தித்த பிறகு, சிம்கிகா என்ற அரக்கியை சந்தித்தார் என்று கூறப்படுகிறது. அனுமன், சமுத்திரத்தின் மேலே பறக்கும்போது, சிம்கிகா கடலில் ஒளிந்து கொண்டிருந்தாள். அனுமன், மேலே பறந்தாலும், சிம்கிகா தன் மந்திரத்தால் அனுமனின் நிழலைப் பிடித்தார் என அறியப்படுகிறது. ஒரு கணக்கின்படி, சுக்ரீவனால் இந்த உயிரினத்தைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்த அனுமன், தனது உடலின் அளவை விரிவுபடுத்தினார். இதைக் கண்ட அரக்கி சிம்கிகா தானும் தன் உடலின் அளவை விரிவுபடுத்தி, அனுமனை விழுங்குவதற்கு முயற்சி செய்தார். அதனால், அனுமன் அவரிடமிருந்து தப்பிப்பதற்காக, தனது உடலை சிறியதாகவும், பெரியதாகவும் மாற்றினார் என்றும், அரக்கி சிம்கிகா அதைப் பின்பற்றும்போது அவரது பாதிப்பைக் கவனித்தார் எனவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், அனுமன் தன்னை சிறியவராக மாற்றி, அவரை விழுங்க அனுமதித்தார். பின்னர், அரக்கியின் வயிற்றின் உள்ளே இருந்துகொண்டு, தனது உருவத்தை பெரிதாக்கி, அரக்கியின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்து, தனது பயணத்தை தொடர்ந்தார் என்று புராணம் கூறுகிறது.[2][3] மற்ற கதைகளின்படி, அனுமன் அரக்கி சிம்கிகாவை உதைத்து கொன்றார் என்றும் கூறப்படுகிறது.[4]
பிரபலமான கலாச்சாரத்தில்
[தொகு]- கலர்ஸ் தொலைக்காட்சியில் நவம்பர் 7, 2016 முதல் மார்ச்சு 9, 2018 வரை ஒளிபரப்பாகி 346 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்ற இந்தி மொழி தொலைக்காட்சி தொடரில் சுதா சந்திரனால் இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ www.wisdomlib.org (2012-06-24). "Simhika, Siṃhikā, Siṅhikā: 18 definitions" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
- ↑ aravamudan, krishnan (2014-09-22). Pure Gems of Ramayanam (in ஆங்கிலம்). PartridgeIndia. p. 373. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-3720-9.
- ↑ Books, Kausiki (2021-10-24). Narasimha Purana: English Translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books. p. 251.
- ↑ Pattanaik, Devdutt (2017-10-09). Ram's Companion: (Penguin Petit) (in ஆங்கிலம்). Penguin Random House India Private Limited. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-87326-09-5.
- ↑ "Sudha Chandran’s Ferocious Avatar As Simhika Will Make You Excited For Colors’ Karamphal Data Shani | India.com" (in en). www.india.com. 1 August 2017. https://www.india.com/entertainment/sudha-chandrans-ferocious-avatar-as-simhika-will-make-you-excited-for-colors-karamphal-data-shani-2369264/.