சிப்ட் கவுர் சாம்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்ட் கவுர் சாம்ரா
தனிநபர் தகவல்
பிறப்பு9 செப்டம்பர் 2001 (2001-09-09) (அகவை 22)
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)துப்பாக்கி சுடுதல்
பதக்கத் தகவல்கள்
மகளிர் துப்பாக்கி சுடுதல்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 ஹாங்சோ 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 ஹாங்சோ 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் (அணி)

சிப்ட் கவுர் சாம்ரா (பிறப்பு 9 செப்டம்பர் 2001) ஒரு இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஒன்பது வயதில், பஞ்சாபில் உள்ள ஒரு துப்பாக்கி சுடுதல் அரங்கில் முதன்முதலில் இதில் ஈடுபட்டார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் (மூன்று நிலைகள்) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதே நேரத்தில் பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் (மூன்று நிலைகள்) இறுதிப் போட்டியில் தற்போதைய உலக சாதனையை நிகழ்த்தினார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் (மூன்று நிலைகள்) குழு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இவரும் ஒருவராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சாம்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக பரித்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இவர் தற்போது அமிர்தசரஸில் உள்ள உடற்கல்வி மற்றும் விளையாட்டு இளங்கலை படித்து வருகிறார். துப்பாக்கி சுடும் வீரரான இவரது உறவினர் செகோன் என்பவரால் இவர் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அறிமுகமானார்.[1] ஒன்பது வயதில், பஞ்சாபில் உள்ள ஒரு துப்பாக்கி சுடுதல் அரங்கில் முதன்முதலில் இதில் ஈடுபட்டார்.[2] இவரது பெற்றோர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வருகின்றனர்.[1]

வாழ்க்கை[தொகு]

சாம்ரா ஜூனியர் உலகக் கோப்பையில் ஐந்து பதக்கங்களை வென்றார். பின்னர் 2022 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.[2] உலகக் கோப்பையில் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் (மூன்று நிலைகள்) போட்டியில் வெண்கலம் வென்றார்.[2] 2023 செப்டம்பரில், சாம்ரா 2.6 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரித்தானி சியோனாய்ட் மெக்கின்டோஷ் வைத்திருந்த உலக சாதனையை சிஃப்ட் முறியடித்தார்.[3] சாம்ரா மொத்தம் 469.6 புள்ளிகளைப் பெற்று, முழங்கால் நிலையில் 154.6, படுத்த நிலையில் 157.9 மற்றும் நின்ற நிலையில் 157.1 புள்ளிகள் பெற்று சீனாவின் கியோங்யூ ஜாங்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் (மூன்று நிலைகள்) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதே நேரத்தில் பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் (மூன்று நிலைகள்) இறுதிப் போட்டியில் தற்போதைய உலக சாதனையை நிகழ்த்தினார்.[4][5][6] 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் (மூன்று நிலைகள்) குழு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இவரும் ஒருவராக இருந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "‘Accidental shooter’ Sift Kaur Samra shows clinical precision for India’s first individual gold with world record". The Times of India. 2023-09-27. https://timesofindia.indiatimes.com/sports/asian-games-2023/india-asian-games/accidental-shooter-sift-kaur-samra-shows-clinical-precision-for-indias-first-individual-gold-with-world-record/articleshow/103997655.cms?from=mdr. 
  2. 2.0 2.1 2.2 "Sift Kaur Samra: Once med student, now world-record gold medallist at Asian Games". ESPN (in ஆங்கிலம்). 2023-09-27. பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  3. Scroll Staff (2023-09-27). "Asian Games, Shooting: Led by Sift Kaur Samra's gold, India win seven medals on Wednesday". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-27.
  4. Desk, TOI Sports (27 Sep 2023). "Asian Games: India's Ashi Chouksey, Manini Kaushik, and Sift Kaur Samara secure silver in shooting — Asian Games 2023 News". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 Sep 2023.
  5. Desk, India Today Sports (27 Sep 2023). "Asian Games 2023: Sift Kaur Samra, Ashi Chouksey, Manini Kaushik win silver in women's 50m Rifle 3P". India Today. பார்க்கப்பட்ட நாள் 27 Sep 2023.
  6. D'Cunha, Zenia; Dasgupta, Shamya; Dawson, Rob (27 Sep 2023). "Asian Games: Ashi, Manini, Sift win 50m 3P team silver". ESPN. பார்க்கப்பட்ட நாள் 27 Sep 2023.
  7. Sriram, Siddarth (27 Sep 2023). "Asian Games 2023: Sift Kaur Clinches Historic Gold With World Record-Breaking Performance; Medal Rush For India Continues In Shooting". News18. பார்க்கப்பட்ட நாள் 27 Sep 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்ட்_கவுர்_சாம்ரா&oldid=3904029" இலிருந்து மீள்விக்கப்பட்டது