சின்னக் காஞ்சிபுரம் பிரம்மபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னக் காஞ்சிபுரம் பிரம்மபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சின்னக் காஞ்சிபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக பிரம்மபுரீசுவரர் உள்ளார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். பிரம்ம தீர்த்தம் கோயிலின் தீர்த்தமாகும்.பிரம்மா சிவனிடம் உயிர்களைப் படைக்கும் ஆற்றலைத் தனக்கு வழங்கும்படி வேண்டினார். அதற்காக ஒரு யாகத்தை நடத்தினார். கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரம்மாவின் மனைவியான சரசுவதி யாகத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆகையால் காயத்ரியையும், சாவித்ரியையும் படைத்து யாகத்தைத் தொடர்ந்தார். அதையறிந்த சரசுவதி ஒரு நதியாக மாறி யாகத்தினை நடத்தவிடாமல் தடுத்தார். இதிலிருந்து தப்பிக்க சிவனிடம் பிரம்மா உத்தியைக் கேட்க சிவன் ஒரு அணையைப் போல நதியின் குறுக்கே படுத்தார். சரசுவதி தவறை உணர்ந்தார். பிரம்மாவின் வேண்டுகோள் நிறைவேறியது. பிரம்மா வணங்கிய ஈசுவரராகையால் பிரம்மபுரீசுவரர் என மூலவர் அழைக்கப்படுகிறார்.[1]

அமைப்பு[தொகு]

மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். மூலவர் சன்னதியின் விமானம் கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளது. சிவன் சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில் முருகன் சன்னதி உள்ளதால் சோமாஸ்கந்த அமைப்பிலுள்ள கோயிலாக இக்கோயிலைக் கூறுவர்.ஆனந்த தட்சிணாமூர்த்தி, சந்திரசேகர கணபதி, சுவாமிநாதர், துர்க்கை, ஆஞ்சநேயர் சன்னதிகள் இக்கோயிலில் உள்ளன. திருசசுற்றில் ஆதிசங்கரரின் திருப்பாதங்கள் காணப்படுகின்றன.[1]

திருவிழாக்கள்[தொகு]

நவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]