சினியோல்ச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினியோல்ச்சு
Siniolchu
Le Siniolchu vu depuis le Glacier de Zemu. Photo de Vittorio Sella (1859-1943).jpg
செமு பனிப்பாறையாறு என்ற இடத்தில் இருந்து விட்டோரியோ செல்லா எடுத்த சினியோல்ச்சு படம்
உயர்ந்த இடம்
உயரம்6,888 m (22,598 ft)
இடவியல் புடைப்பு1,480 m (4,860 ft)
புவியியல்
சினியோல்ச்சு Siniolchu is located in இந்தியா
சினியோல்ச்சு Siniolchu
சினியோல்ச்சு
Siniolchu
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்1936
எளிய அணுகு வழிபனிப்பாறையாறு/பனி/பனிக்கட்டி ஏற்றம்

சினியோல்ச்சு (Siniolchu) என்பது இந்திய நாட்டின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள உயர்ந்த மலைகளில் ஒன்றாகும். இம்மலை 6888 மீட்டர்கள் அல்லது 22,598 அடிகள் ஓங்கி உயர்ந்து குறிப்பாக பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காணப்படுகிறது. ஆங்கில நாட்டைச் சேர்ந்த மலையேறும் வல்லுநர் டக்ளசு வில்லியம் பிரெசுபீல்டு இம்மலையைக் குறித்துக் கூறுகையில், மலைகளின் கட்டமைப்பு இலக்கணத்தை வெற்றி கொண்டுள்ள ஒர் அற்புதமான மலை என்றும் உலகத்திலேயே காண்பதற்குக் கிடைத்த மிகவும் எழிலான வெண்பனி மலையென்றும் குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே உயரத்தில் மூன்றாவதா்வும் மாநிலத்தில் முதலாவதாக்வும் இருக்கும் கஞ்சன்சங்கா மலைக்கு அருகில் இருக்கும் பச்சை ஏரிக்கு அருகாமையில் சினியோல்ச்சு மலை அமைந்துள்ளது.

1936 ஆம் ஆண்டில் செருமன் மலையேற்ற வீரர்கள் கார்ல் வெயின் மற்றும் ஆடி கோட்நெர் ஆகியோர் உச்சிக்குச் சென்று வெற்றி கண்டனர்[1]. பின்னர் சிக்கிமின் எவரெஸ்டு மலையேற்ற வீரர் சோனம் கியாட்சோ வெற்றிகரமாக உச்சியை சென்றடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mason, Kenneth (1955). Abode of the Snow. Rupert Hart-Davis. பக். 275–276. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-906371-91-6. Reprinted 1987 by Diadem Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினியோல்ச்சு&oldid=1894794" இருந்து மீள்விக்கப்பட்டது