உள்ளடக்கத்துக்குச் செல்

சித்ராலயா (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்ராலயா என்பது ஒரு தமிழ் திரைப்பட வார இதழாகும். இது சிறுபக்கச் செய்தித்தாளாக பக்கங்களுக்கு இடையில் கம்பி மடிப்பு ஏற்படுத்தாமல் வெளியிடப்பட்டது.[1] இப்பத்திரிக்கையானது 1973 காலகட்டத்தில் வெளிவந்தது.

இந்த இதழானது திரைப்பட இயக்குநர் ஸ்ரீதரால் துவக்கப்பட்டது. இந்த இதழுக்கு பங்குதாரர்களாக ஸ்ரீதரின் மனைவி தேவசேனா, சித்ராலயா கோபுவின் மனைவி கமலா, ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டின் மனைவி, ஒளிப்படக் கலைஞர் திருச்சி அருணாசலமத்தின் மனைவி ஆகியோர் இருந்தனர். இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக வெண்ணிற ஆடை மூர்த்தி இருந்தார். இதழை தொடர்ந்த இயலாத காரணத்தால் பின்னர் இது நிறுத்தப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அறந்தை மணியன் (2014 சூலை 15- 30). "தமிழில் சினிமா சஞ்சிகைகள்". கட்டுரை. thamizhstudio.com. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. டி.ஏ.நரசிம்மன் (4 சனவரி 2019). "ஜெயலலிதா சிரித்தது ஏன்?". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ராலயா_(இதழ்)&oldid=3577214" இலிருந்து மீள்விக்கப்பட்டது