சித்திக் உல்-இஸ்லாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்திக் உல்-இஸ்லாம் (Siddique ul-Islam வங்காள மொழி: সিদ্দিকুল ইসলাম) பங்களா பாய் என்றும் அழைக்கப்பட்டார். இவர் வங்காளதேசத்தைச் சார்ந்த தீவிரவாதி ஆவார்.[1] இவருக்கு அஸிஸுர் ரஹ்மான் என்ற பெயரும் உண்டு. இவருக்கு அல் காயிதா அமைப்புடன் தொடர்பு உண்டு.[2] சோவியத் படைகளுக்கு எதிராக 1980 களில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுடன் இணைந்து போர் புரிந்தார். பின்னர் வங்காளதேசம் திரும்பியதும் வங்காளதேச ஜமாத்-உல்-முஜாகிதீன் எனும் தீவிரவாத அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 2005 ஆம் ஆண்டு வங்காளதேசம் முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்பின்[3] பின்னான தேடுதலில் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரும் கைது செய்யப்பட்டார்.[4] 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தியதி இவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.[5]

இதையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திக்_உல்-இஸ்லாம்&oldid=3367330" இலிருந்து மீள்விக்கப்பட்டது