சித்தார்த் கக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தார்த் கக்
செயற்பாட்டுக்
காலம்
1972–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கீதா சித்தார்த்
பிள்ளைகள்அந்தரா கக்

சித்தார்த் கக் (Siddharth Kak) ஒரு இந்திய ஆவணத் திரைப்படத் தயாரிப்பாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் மற்றும் தொகுப்பாளரும் ஆவார். 1990களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட சுரபி என்ற கலாச்சார நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் வழங்குநர் என்று நன்கு அறியப்பட்டவர். அதைத் தொடர்ந்து, போர்டு அறக்கட்டளை உதவியுடன் 'சுரபி அறக்கட்டளை'யை காக் நிறுவினார், மேலும் கலாச்சார கலைப்பொருட்களைப் பாதுகாக்கும் திட்டத்தையும் தொடங்கினார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சித்தார்த், இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்த்தின் சானாவரில் அமைந்துள்ள லாரன்ஸ் பள்ளியில் [2] கல்வி பயின்றார். பின்னர் புது தில்லி செயின்ட் இசுடீபன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

சித்தார்த் கக் என்டிடிவியின் துணை நிறுவனமான இமேஜினில் பிரபலமான குசராத்தி நாடகக் கலைஞரான அமி திரிவேதியுடன் "இந்தியதனுஷ்" என்ற பயண நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் நடிகை கீதா என்பவரை மணந்தார் [3] [4] இவரது மனைவி 2019இல் இறந்தார். இவர்களின் மகள் அந்தரா கக் ஒரு ஆவணப்பட தயாரிப்பாளராக இருக்கிறார்.[3] [5]

பணிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Glorifying India's diverse culture on the celluloid screen". Indian Express. 18 May 2002. http://cities.expressindia.com/fullstory.php?newsid=17951. "Glorifying India's diverse culture on the celluloid screen".
  2. Hemal Ashar (9 May 2009). "Ragging a reflection of our brutal world". Mid-Day. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
  3. 3.0 3.1 IANS (15 December 2019). "Parichay Actress Gita Siddharth Kak Dies". NDTV.com. https://www.ndtv.com/entertainment/parichay-actress-gita-siddharth-kak-dies-2149030. பார்த்த நாள்: 15 December 2019. 
  4. IANS (15 December 2019). "Garam Hawa actress Gita Siddharth dies in Mumbai". India Today. https://www.indiatoday.in/movies/celebrities/story/garam-hawa-actress-gita-siddharth-dies-in-mumbai-1628379-2019-12-15. பார்த்த நாள்: 15 December 2019. 
  5. Juwale (16 June 2002). "Creative daughters of celebrity parents". The Tribune. http://www.tribuneindia.com/2002/20020616/herworld.htm#1. பார்த்த நாள்: 6 June 2018. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்_கக்&oldid=3957102" இலிருந்து மீள்விக்கப்பட்டது