சிங் மூன் ஆறு
Jump to navigation
Jump to search
சிங் மூன் ஆறு அல்லது சிங் மூன் கால்வாய் (Shing Mun River Channel) என்பது கடலுடன் இணைந்த ஒரு கால்வாய் அல்லது ஆறு ஆகும். இதனை "சிங் மூன் கால்வாய்", "சிங் மூன் ஆறு", சிங் மூன் கால்வாய் ஆறு" என்றும் பலப்பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்தக் ஆறு ஹொங்கொங்கில், சா டின் மாவட்டத்தில் உள்ளது.
வரலாறு[தொகு]
இந்த ஆறு ஊசி மலை எனும் இடத்தில் இருந்தே ஊற்றெடுப்பதாக அறியமுடிகிறது. 1970 ஆம் ஆண்டுகளில் இந்த ஆற்றின் கரைப் பகுதிகள் நிலவுருவாக்கத் திட்டத்தின் கீழ் சா ட்டின் புதிய நகரம் உருவாக்கம் பெற்றது. இந்த ஆறு 7 கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டதாகும். 200 அகன்ற செயற்கை கால்வாய்களையும் கொண்டுள்ளது.