சிங்கோலி யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கோலி யுத்தம்
தேதி 1326
இடம் சிங்கோலி, மத்தியப் பிரதேசம்
முடிவு இராசபுத்திர வெற்றி
நாடுகள்
மேவார் இராச்சியம்

ஆம்பெர் இராச்சியம்

தில்லி சுல்தானகம்
மன்னர் மற்றும் தளபதிகள்
அம்மிர் சிங்
ஜுன்சி கச்வகா[2]
முகம்மது பின் துக்ளக் (கைதி)

சிங்கோலி யுத்தம் (Battle of Singoli) (பொ. ஊ. 1326) என்பது அம்மிர் சிங் தலைமையிலான மேவார் படைகளுக்கும், முகம்மது பின் துக்ளக்கால் தலைமை தாங்கப்பட்ட துக்ளக் படைகளுக்கும் இடையில் தற்போதைய இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிங்கோலி என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு யுத்தமாகும். இந்த யுத்தத்தில் அம்மிர் சிங் துக்ளக்கின் படைகளைத் தோற்கடித்தார். முகம்மது பின் துக்ளக்கை கைதியாக சிறை பிடித்தார்.[3]

தில்லி சுல்தானகத்திடம் திறை செலுத்தி வந்த சௌகான் இனத்தவரும், மல்தேவின் மகனுமான ஜெய்சாவை மேவாரில் இருந்து வெளியேற்றியதன் மூலம் அதன் கட்டுப்பாட்டை அம்மிர் சிங் பெற்றார். முகம்மது பின் துக்ளக்கின் தில்லி அரசவைக்கு ஜெய்சா தப்பித்துச் சென்றார். தன்னுடைய வலிமையான இராணுவத்தினருடன் மேவாரை நோக்கி துக்ளக் அணி வகுப்பதற்கு இது இட்டுச் சென்றது. இதைத் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் துக்ளக்கின் இராணுவமானது தோற்கடிக்கப்பட்டது. முகம்மது பின் துக்ளக் கைதியாக பிடிக்கப்பட்டார். சித்தோர்கார் நகரில் மூன்று மாதங்களுக்கு கைதியாக தொடர்ந்து இருந்தார். சுல்தானகமானது அஜ்மீர், இரந்தம்பூர், நாகவுர் மற்றும் சோபோர் ஆகிய இடங்களை விட்டுக் கொடுத்ததற்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். மேலும், அம்மிர் சிங்கிற்கு பிணையத் தொகையாக 50 இலட்சம் ரூபாயையும், 100 யானைகளையும் தில்லி சுல்தானகம் கொடுத்தது.[4][5]

யுத்தத்திற்குப் பின்[தொகு]

அஜ்மீர், இரந்தம்பூர், நகௌர் மற்றும் சோபோர் ஆகிய இடங்களின் கட்டுப்பாட்டை அம்மிர் சிங் பெற்றார். இவரது சக்தியானது பிற இராசபுத்திர தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Āghā Mahdī Ḥusain (1938). The Rise and Fall of Muhammad Bin Tughluq. Luzac. பக். 95. "A battle was fought near the village of Singoli in which Hammir defeated the Sultān, and took him prisoner" 
  2. V.S Bhatnagar (1974) (in en). Life and Times of Sawai Jai Singh, 1688–1743. Impex India. பக். 377. https://books.google.com/books?id=plFuAAAAMAAJ. "In regards of Allaudin invasion, We do not know the outcome of the campaign. However, even if Amber was conquered by Turkish domination, which seems likely, it is certain that they soon regained freedom by taking advantage of the growing weakness of the Sultanate after 1335 A.D by Raja Junsi (Jawan Singh) in joining Rana Hammir of Mewar against Delhi Sultanate forces" 
  3. R. C. Majumdar, தொகுப்பாசிரியர் (1960). The History and Culture of the Indian People: The Delhi Sultante (2nd ). Bharatiya Vidya Bhavan. பக். 70. https://books.google.com/books?id=XKVFAQAAMAAJ. 
  4. R. C. Majumdar, தொகுப்பாசிரியர் (1960). The History and Culture of the Indian People: The Delhi Sultante (2nd ). Bharatiya Vidya Bhavan. பக். 70. https://books.google.com/books?id=XKVFAQAAMAAJ. 
  5. Rima Hooja (2006). A History of Rajasthan. Rupa & Company. பக். 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788129108906. https://books.google.com/books?id=tosMAQAAMAAJ&q=singoli. 
  6. R. C. Majumdar, தொகுப்பாசிரியர் (1960). The History and Culture of the Indian People: The Delhi Sultante (2nd ). Bharatiya Vidya Bhavan. பக். 70. https://books.google.com/books?id=XKVFAQAAMAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கோலி_யுத்தம்&oldid=3775813" இலிருந்து மீள்விக்கப்பட்டது