சிங்கே-சூகில் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கே-சூகில் வினை ( Zincke–Suhl reaction) பிரீடல்-கிராப்டு ஆல்க்கைலேற்ற வினையின் ஒரு தனிச்சிறப்பு வினையாகக் கருதப்படுகிறது. தியோடர் சிங்கேவும், சூகிலும் முதன்முதலாக இவ்வினையைக் குறித்து விவரித்தனர் [1][2][3]

சிங்கே-சூகில் வினை
சிங்கே-சூகில் வினை

.

பாரா கிரெசாலை, அலுமினியம் குளோரைடு வினையூக்கி மற்றும் நாற்குளோரோமெத்தேன் கரைப்பான் ஆகியவற்றின் உதவியுடன் சைக்ளோயெக்சாடையீனோனாக மாற்றும் வினையை இவ்வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மெல்வின் நியுமேன் என்கிற அமெரிக்க அறிவியல் அறிஞர் 1950 களில் சிங்கே-சூகில் வினை குறித்த ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். இவ்வினை தொடர்பான மேம்படுத்தப்பட்ட செயல்முறைகளையும், இயந்திரத்தன்மையுள்ள ஆய்வுகளையும் அறிவித்தார்.

சிங்கே-சூகில் வினையில் உருவாக்கப்படும் வேதிச்சேர்மமே டையீனால் பென்சீன் மறுசீரமைப்பு வினைக்கு தொடக்கநிலை வேதிப்பொருளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. M Newman. A Study of the Zincke and Suhl Reaction, J. Am. Chem. Soc. 19(6) (1954) p978
  2. M Newman. The Aluminum Chloride-catalyzed Reaction of Benzotrichloride with p-Cresol, J. Am. Chem. Soc. 19(6) (1954) p985
  3. Zincke, Th.; Suhl. R. (1906). "Ueber die Einwirkung von Tetrachlorkohlenstoff und Aluminiumchlorid auf p-Kresol und p-Kresolderivate". Chemische Berichte 39 (4): 4148–4153. doi:10.1002/cber.190603904115. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கே-சூகில்_வினை&oldid=2747872" இருந்து மீள்விக்கப்பட்டது