சிக்னக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தபால் தலையில் சிக்னக்

சிக்னக் (Sighnaq) (காசாக்கு மொழி: Сығанақ, romanized: Syğanaq;) என்பது நடு ஆசியாவிலிருந்த ஒரு பண்டைக்கால நகரமாகும். இது தற்போதைய கசக்கஸ்தானின் கைசிலோர்தா பகுதியில் உள்ளது. இந்த நகரமானது கிட்டத்தட்ட முழுவதுமாக அறியப்படாமல் இருந்த போதிலும், இது நீல நாடோடிக் கூட்டத்தின் தலை நகரமாக இருந்தது. பாரசீக நூல்களில் இந்த நாடோடி கூட்டமானது வெள்ளை நாடோடிக் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரப் என்று அழைக்கப்பட்ட பகுதியில் இந்த நகரம் அமைந்திருந்தது. பரப் பகுதி இசுபிசப் மற்றும் ஜன்ட் ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்திருந்தது. சிக்னப் என்ற பெயரின் பொருள் "புகலிடம்" என்பதாகும். இப்பெயரானது பிற பகுதிகளிலும் கூட, குறிப்பாக, தெற்கு காக்கேசியாவில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்னக்&oldid=3776491" இலிருந்து மீள்விக்கப்பட்டது