சா. பூல்சந்த் வீர்சந்த் அரசு மேல்நிலைப் பள்ளி, சீரநாயக்கன்பாளையம்
சா. பூல்சந்த் வீர்சந்த் அரசு மேல்நிலைப் பள்ளி என்ற பள்ளி தமிழ்நாட்டின், கோயமுத்தூர் மாவட்டம், சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆகும்.
சா. பூல்சந்த் வீர்சந்த் அரசு மேல்நிலைப் பள்ளியானது கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே சீரநாயக்கன் பாளையத்தில் உள்ளது. இப்பள்ளி 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளியில் 26 ஆசிரியர்களும், 352 மாணவர்களும் உள்ளனர். இப்பள்ளியில் தமிழ், ஆங்கில வழி வகுப்புகள் உள்ளன. ஆங்கில மொழித் திறனை வளர்க்க இந்தப் பள்ளியில் ஆங்கில மொழி ஆய்வகம் செயல்படுகிறது. பள்ளியில் சடுகுடு, துடுப்பாட்டம், கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு, மண்டல, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் இந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இங்கு பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், கட்டாயம் உயர் கல்வியையும் முடிக்க வேண்டும் என்பதில் பள்ளி நிர்வாகம் கவனத்துடன் இருக்கிறது. 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிந்த பிறகு எல்லா மாணவர்களையும் கூட்டி பேசி, அனைவரும் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறனர். என்னென்ன படிப்புகளை தேர்வு செய்யலாம் என ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. பொருளாதார சூழல் காரணமாக உயர் கல்வி வகுப்புகளில் சேர முடி யாத மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து. முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தி, அவர்கள் கல்லூரி படிப்பில் சேருவதை உறுதி செய்கிறனர். இதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இப்பள்ளியின் பழைய மாணவர்கள் நிதியுதவி செய்கின்றனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வி.தேவதாசன் (25 சூன் 2017). "பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களையும் கல்லூரி படிப்புகளில் சேர்க்கும் சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2017.