சா. நசீமா பானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சா. நசீமா பானு (பிறப்பு: மே 8 1949) இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர், தேரூர் குமரி மாவட்டத்தில் பிறந்து தற்போது தம்பி சாயபு மரைக்காயர் வீதி, காரைக்காலில் வாழ்ந்துவரும் இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவரும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், கவிஞரும், பேச்சாளரும், கவியரங்கம், பட்டிமன்றம், சமய இலக்கிய நிகழ்ச்சிகளில் அதிகமாகப் பங்கேங்கும் பெண்மணிகளுள் ஒருவருமாவார். இஸ்லாமியத் தமிழிலக்கியக்கழகத்தின் மகளிர் பிரிவுத் தலைவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

 • இலக்கியத் தென்றல் (1993), கங்கை புத்தக நிலையம் சென்னை[1]
 • இவர்கள் இன்று சந்தித்தால்
 • இஸ்லாம் பெண்களும் (1994), காஜியார் புக்டிப்போ, தஞ்சாவூர்
 • கண்மணிகளுக்குக் காயிதே மில்லத் (1996), கங்கை புத்தக நிலையம், சென்னை
 • கருத்தரங்குக் கட்டுரைகள்
 • சங்க இலக்கியத்தில் மனையறம்
 • திருவருட்பாவை
 • வெற்றிப்பதக்கம் (1997), கங்கை புத்தக நிலையம் சென்னை

உட்பட சுமார் 15 நூல்கள்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

 • உமறுப் புலவர் விருது 2019
 • அருந்தமிழ் பணிச் சான்றோர்’ விருது
 • இலக்கியத் தென்றல் விருது
 • இறையருள் கலைமணி விருது
 • உயர் நோக்கு உனன்தப் பணியாளர் எனும் பாராட்டு விருது
 • கண்மணிகளுக்குக் காயிதே மில்லத் எனும் நூலுக்கான தங்கப் பதக்கம்
 • கம்பன் கலைச்சுடர் விருது
 • நஜ்ல் கலாம் விருது
 • மங்கையர் மாமணி விருது
 • வெற்றிப்பதக்கம் எனும் நூலுக்கான தங்கப் பதக்கம்

மேலும் இலங்கை அரசின் பட்டம் பாராட்டும் பெற்ற முதல் முஸ்லிம் இந்தியத் தமிழறிஞரும் இவரேயாவார்.

உசாத்துணை[தொகு]

 • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._நசீமா_பானு&oldid=2826861" இருந்து மீள்விக்கப்பட்டது