சாவில் பிழைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாவில் பிழைத்தல் (Terminal lucidity) என்பது மிகவும் அரிதாகவும் எதிர்பாராமலும் நிகழ்வது ஆகும். கடுமையான நரம்பியல் நோயாலும், மன நோயினாலும் பாதிக்கப்பட்டு சாக இருக்கும் நோயாளிகளுக்கு, இறுதி நேரத்தில் எதிர்பாராத வகையில் நினைவு திரும்பி வரக்கூடிய நிலையும், மனமும் தெளிவு பெறுகிற நிலையும் ஏற்படுவது அரிதாக நிகழ்கிறது. மனச்சிதைவு, மூளைக் கட்டி, வாத நோய், கடும் காய்ச்சல், அல்சீமர் நோய் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமும் இந்த எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.[1] சாகும் தறுவாயில் ஒரு வாரக் காலத்தில் படிப்படி முன்னேற்றம் ஏற்படுவது உண்டு. சாகும் நிலையில் சில மணி நேரத்தில் இந்த தெளிவு நிலை ஏற்படுவதும் உண்டு.

இந்த வியக்கத்தக்க அரிய மருத்துவ நிகழ்வுகள் குறித்து உயிரியல் ஆராய்ச்சி அறிஞர் மைக்கேல் நேம் என்பவர் பல ஆய்வுக் கட்டுரைகளும் நூலும் எழுதியிருக்கிறார்.[2]

இதனையும் பார்க்க[தொகு]

மைக்கேல் நேம் இணையத் தளம்

மேற்கோள்[தொகு]

  1. Nahm, Michael; Greyson, Bruce; Kelly, Emily Williams; Haraldsson, Erlendur (2012). "Terminal lucidity: A review and a case collection". Archives of Gerontology and Geriatrics 55 (1): 138–42. doi:10.1016/j.archger.2011.06.031. பப்மெட்:21764150. 
  2. http://skeptiko.com/278michael-nahm-terminal-lucidity/
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவில்_பிழைத்தல்&oldid=2749006" இருந்து மீள்விக்கப்பட்டது