உள்ளடக்கத்துக்குச் செல்

சாரீன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரீன் கான்

சாரீன் கான்(Zareen Khan) [பிறப்பு: 14 மே, 1987] இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் பஞ்சாபி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் அனில் சர்மா இயக்கிய வீர் என்னும் திரைப்படத்தில் சல்மான்கானின் இணையாக நடித்தார். இத்திரைப்படம் ஜீ தொலைக்காட்சியின் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் நடிப்பில் வெளியான ஹவுஸ்புல் 2 என்னும் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படமாகும். 2013 ஆம் ஆண்டில் நான் ராஜாவாகப் போகிறேன் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சாரீன் கான் 14 மே, 1987 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரத்தின் மும்பை நகரில் பிறந்தார். இவர் இஸ்லாமிய பஷ்தூன் இனத்தினைச் சார்ந்தவர் ஆவார்.[1][2][3] இவர் இந்தி, உருது, ஆங்கிலம், மராத்தி மற்றும் பஷ்தூன் ஆகிய மொழிகளைப் பேசும் திறமையுடையவர் ஆவார்.[4][5] மும்பையிலுள்ள ரிஸ்வி அறிவியல் கல்லூரியில் கல்வி பயின்றார்.

திரைத்துறை

[தொகு]
2010 ஆம் ஆண்டில் சாரீன் கான்

மருத்துவராக ஆசைப்பட்டு பின்னர், நடிகையானவர் சரீனா கான். சுபாஷ் கய் உருவாக்கிய யுவ்ராஜ் திரைப்பட படப்பிடிப்புத் தளத்திற்கு சாரீன் கான் சென்றபோது இவரைப் பார்த்த சல்மான் கான் அவரது நண்பரான அனில் சர்மாவிடம் பேசி இவரை நடிகையாக வீர் என்னும் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.[6] இத்திரைப்படத்தில் இளவரசி யசோதையாக நடிப்பதற்கு சல்மான் கான் பரிந்துரைத்தார். அதன் பொருட்டு அக்கதாப்பாத்திரத்திற்காக தன் உடல் எடையை எட்டு கிலோகிராம்கள் அதிகரித்தார்.[7] ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழான இந்தியாவினைச் சித்தரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் இவரது நடிப்பு மக்களாலும் விமர்சகர்களாலும் குறிப்பிடப்பட்டது. இந்தித் திரைப்படம் தவிர்த்து பிற மொழிப்படங்களில் இவர் நடித்து முதலில் வெளியானது ஜாட் ஜேம்ஸ் பாண்ட் என்னும் பஞ்சாபி மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் வெளியானது. இதில் லல்லி என்னும் வெகுளியான கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. சாரீன் கான், விருதினைப் பெறும் அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் என திரைப்பட விமர்சகர் கோமல் நாக்தா குறிப்பிட்டார்.[8][9] தமிழ்த் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார்.

திரைப்படங்களின் பட்டியல்

[தொகு]
வருடம் திரைப்படம் வேடம் மொழி குறிப்பு
2010 வீர் இளவரசி யசோதை இந்தி ஜீ தொலைக்காட்சி விருதிற்கு முன் மொழியப்பட்டது
2011 ரெடி குஷி இந்தி ஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்
2012 ஹவுஸ்புல்2 ஜெலோ இந்தி
2013 நான் ராஜாவாகப் போகிறேன் மல்கோவா தமிழ் ஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்
2014 ஜாட் ஜேம்ஸ் பாண்ட் லல்லி பஞ்சாபி அறிமுகத் திரைப்படம்
2014 டெத் ஆப் அமெர் பத்திரிகையாளர் இந்தி
2015 ஹேட் ஸ்டோரி 3[10] சியா திவான் இந்தி
2016 வீரப்பன் இந்தி ஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்  
2016 வாஜா தும் ஹோ இந்தி ஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்
2017 அக்ஸார் 2 ஸீனா இந்தி
2018 1921 ரோஸ் இந்தி

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""I Am Muslim, I Know My Islam": Zareen Khan". Bollywood Hungama.
  2. Mangal Dalal (8 January 2010). "When Men Were Men". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 6 May 2014. Asked about whether it was a risk casting Zarine Khan, the debutant from the UK, Khan says: "She's a Pathan girl who speaks Hindi and Urdu well and was spectacular in the screen test. It was pure luck."
  3. Mangal Dalal (8 January 2010). "'Veer' also has a social message behind it: Salman Khan". Express India. Archived from the original on 14 March 2012. பார்க்கப்பட்ட நாள் 6 May 2014. Asked about whether it was a risk casting Zarine Khan, the debutant from the UK, Khan says: "She's a Pathan girl who speaks Hindi and Urdu well and was spectacular in the screen test.
  4. "No bikini for me: Zarine Khan". Mid-Day (IANS). 2010-01-27. http://www.mid-day.com/entertainment/2010/jan/270110-zarine-khan-no-bikini.htm. பார்த்த நாள்: 2010-11-22. 
  5. Natasha Sahgal (11 January 2010). "Zarine Khan is living a dream as the heroine in 'Veer'". The Indian Express. http://www.indianexpress.com/news/zarine-khan-is-living-a-dream-as-the-heroine-in-veer/566067/. பார்த்த நாள்: 2010-11-22. 
  6. Soumyadipta Banerjee (24 January 2010). "Zarine Khan is a tough cookie". Daily News & Analysis. http://www.dnaindia.com/entertainment/report_zarine-khan-is-a-tough-cookie_1338854. பார்த்த நாள்: 27 January 2010. 
  7. Subhadeep Bhattacharjee (16 December 2009). "Salman made Zarine Khan gain weight". Oneindia.in இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020102506/http://entertainment.oneindia.in/bollywood/gupshup/2009/zarine-put-on-weight-161209.html. பார்த்த நாள்: 27 January 2010. 
  8. Beautiful Zarine Khan At The Jaat James Bond Promotions - Oneindia Boldsky
  9. "Vindu Dara Singh elated with Jatt James Bond success - Hindustan Times". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2018-03-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  10. "Which is the raunchiest Hate Story? VOTE!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரீன்_கான்&oldid=3553549" இலிருந்து மீள்விக்கப்பட்டது