சாந்தா காயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தா காயன்
சாந்தா காயன்
Chhanda Gayen
எவரெசுட்டு சிகர உச்சியில் சாந்தா காயன், 2013
பிறப்பு(1979-07-09)சூலை 9, 1979
மேற்கு வங்காளம்,இந்தியா
இறப்புமே 20, 2014(2014-05-20) (அகவை 34)
கஞ்சன்சங்கா மலை
தேசியம்இந்தியா
பணிமலையேறி
அறியப்படுவதுஎவரெசுட்டு சிகரம் ஏறிய பெண்

சாந்தா காயன் (Chhanda Gayen) வங்காளத்தைச் சேர்ந்த ஒரு மலையேறும் வீரராவார். 1979 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 அன்று இவர் பிறந்தார். மலையேற்றம் தவிர தற்காப்புக் கலைஞர், ஆய்வாளர் மற்றும் தற்காப்புக்கலை ஆசிரியராகவும் இவர் இருந்தார். 2013 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று காலை 7 மணிக்கு எவரெசுட்டு சிகரத்தை ஏறிய இவர் இந்திய மாநிலமான மேற்கு வங்கத்திலிருந்து இச்சிகரத்தை ஏறிய முதல் பெண் என்ற பெயரில் இவர் மிகவும் பிரபலமானவர். ஏபிபி ஆனந்தா தொலைக்காட்சி 2013 ஆம் ஆண்டு ஆகத்து 8 அன்று செரா அவிசுகர்" என்ற விருதை இவருக்கு வழங்கியது. [1] 2014 ஆம் ஆண்டு மே மாதம் 20 அன்று, நேபாளத்தின் காஞ்சஞ்சங்கா மலையின் மேற்குப் பகுதியில் இறங்கும்போது பனிச்சரிவில் இரண்டு செர்பாக்களுடன் இவர் காணாமல் போனார். அவர்கள் மூவரும் பின்னர் பனிச்சரிவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். [2]

கும்பு பனிப்பொழிவுகளுக்கு அருகே

மேற்கோள்கள்[தொகு]

  1. Mount Everest conquered by West Bengal's Chanda Gayen. Press Trust of India : Kolkata, Sat 18 May 2013 [1]
  2. "Mamata Banerjee heads to Nepal to rescue missing Indian Mountaineer Chhanda Gayen". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா_காயன்&oldid=3066628" இலிருந்து மீள்விக்கப்பட்டது