உள்ளடக்கத்துக்குச் செல்

சாத்கபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாத்கபர் (Saat Kabar) என்பது கர்நாடக மாநிலம், பிஜப்பூரில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தளம் ஆகும். இங்குதான் அப்சல் கான் மற்றும் அவரின் அறுபது (60) மனைவிகளின் கல்லறைகள் அமைந்துள்ளன. இந்தக் கல்லறைகள் குறித்து நிலவும் கதை பின்வறுமாறு மாராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மீது அப்சல் கான் போர் தொடுத்ததே இக்கல்லறை அமைய காரணம். சோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட அப்சல் கான் தமது தலைமை சோதிடரை அழைத்து சிவாஜியின் மீது போர் தொடுத்தால் போரில் வெற்றி பெற முடியுமா என வினவினான். அதற்கு தலைமை சோதிடர், சிவாஜி மீது போர் தொடுத்தல் போரில் நிச்சயம் நீ கொல்லப்படுவாய் என கூறினார். இதைக்கேட்டு மனமுடைந்த அப்சல் கான் ஒரு வேளை தாம் போரில் தோற்று உயிரிழந்தால் தம் அறுபது மனைவிகளும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வார்கள் என பயந்தான். அதனால் தம் அறுபது மனைவிகளையும் ஒரே இடத்தில் கூடச் செய்து தமது படை வீரர்களை விட்டு கொல்ல முடிவு செய்தான். அவர்களில் இருவர் தப்பிவிட அவர்களையும் தேடி கண்டுபிடித்து கொலை செய்தான். பிறகு அறுபது சடலங்களும் உள்ளதா என உறுதி செய்து கொண்டு போருக்கு புறப்பட்டான். போரில் சோதிடர் கூறியபடியே அப்சல் கான் சிவாஜியால் புலி நகத்தால் கிழித்துக் கொல்லப்பட்டான்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "http://www.vijapuraonline.in/city-guide/saat-kabar-in-bijapur". vijapuraonline.in. Archived from the original on 2016-10-30. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2017. {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்கபர்&oldid=3616597" இலிருந்து மீள்விக்கப்பட்டது