சாக்கான் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாக்கன் ஆறு (Chakan River) இராசத்தான் மாநிலத்தில் பாய்கின்ற ஒரு துணை ஆறாகும். பல சிறிய நீரோடைகளின் சங்கமத்தால் உருவாகும் சாக்கன் ஆறு தென்கிழக்கு திசையில் பாய்ந்து இராசத்தாஅனின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள கரன்புரா கிராமத்திற்கு அருகில் சம்பல் நதியுடன் இணைகிறது. சவாய் மாதோபூர் மாவட்டம், டோங் மாவட்டம், பூந்தி மாவட்டம், கோட்டா மாவட்டம் ஆகியவை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகும். இந்நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 300 சதுர மைல்கள் பாரப்பளவு கொண்டதாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கான்_ஆறு&oldid=3510087" இலிருந்து மீள்விக்கப்பட்டது