சாகித் உசைன்
Appearance
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | அனந்தநாக், காசுமீர் |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
சாகித் உசைன் (Zahid Hussain (shooter)) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரராவார். காசுமீரின் அனந்த்நாக்கு நகரத்தைச் சேர்ந்த இவர்[1][2] தென் கொரியாவின் சாங்வோம் நகரத்தில் நடைபெற்ற 2023 ஆசிய துப்பாக்கி சுடுதல் வெற்றியாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று குறிப்பிடத்தக்க சாதனை படைத்தார். இவ்வெற்றியின் மூலம் பாரிசு நகரத்தில் நடைபெறவுள்ள 2024 ஒலிம்பிக்கு போட்டியில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார்.[1][3]
ஆண்களுக்கான 50மீ சுழல்துப்பாக்கி கவிழ்நிலை போட்டியில் சாகித் உசைன் 624.5 புள்ளிகளைப் பெற்றார். 625.6 புள்ளிகள் பெற்ற கசக்கசுத்தான் வீரர் இப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். சீனாவின் டு லின்சூ 624.3 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Desk, GK Web (2023-10-29). "South Kashmir youth wins silver in Asian Shooting Championship". Greater Kashmir (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-30.
- ↑ "Kashmiri youth Zahid Hussain shines with silver at Asian Shooting Championship". The Kashmiriyat (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-10-29. பார்க்கப்பட்ட நாள் 2023-10-30.
- ↑ "Asian Shooting Championship: Two shooters from Jammu and Kashmir make their mark". ETV Bharat News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-01.