சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது (Bhasha Samman), இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற 24 மொழிகள் தவிர பிற இந்திய மொழிகளின் அறிஞர்கள், எழுத்தாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் அமைப்பளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 1996-ஆம் ஆண்டு முதல் பதக்கம் மற்றும் ரூபாய் 25,000 ரொக்கப் பணத்துடன் பாஷா சம்மான் விருது சாகித்திய அகாதமி வழங்கி கௌரவிக்கிறது.

2009-ஆண்டு முதல் பதக்கத்துடன் ரொக்கப் பணம் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. பாஷா சம்மான் விருது ஆண்டு தோறும் அங்கீகாரம் பெறாத இந்திய மொழிகள் பேசும் மூன்று முதல் நான்கு நபர்களுக்கு வழங்கப்படுகிறது.[1]

சௌராஷ்டிர மொழிக்கான விருதை பெற்றவர்கள்[தொகு]

தமிழ்நாட்டில் சிறுபான்மையினரான சௌராட்டிரர்கள் பேசும் சௌராஷ்டிர மொழி மற்றும் இலக்கிய மேம்பாட்டிற்காக உழைத்த கே. ஆர். சேதுராமன் மற்றும் தாடா. சுப்பிரமணியன் ஆகிய எழுத்தாளர்களுக்கு கூட்டாக 2006ஆம் ஆண்டில் பாஷா சம்மான் (Bhasha Samman) விருது வழங்கப்பட்டுள்ளது.[2]

2015ல் இதே விருதை டி. எஸ். சரோஜா சுந்தரராஜன் மற்றும் டி. ஆர். தாமோதரன் கூட்டாகப் பெற்றனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]