சாகர்தீப் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகர்தீப் கவுர் (Sagardeep Kaur) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் இவர் பெண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.[1] 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக வெற்றியாளர் போட்டியில் போட்டியிட்ட இந்திய அணி, 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தொடக்க ஓட்டத்திற்குப் பிறகு வெளியேறியது. அங்கு இவர்கள் கடைசி இடத்தையே பிடித்தனர்.

சாகர்தீப் கவுரின் தனிப்பட்ட சாதனை 400 மீட்டரில் இவர் ஓடிய சிறந்த நேரம் 52.50 வினாடிகள் என்பதாகும். 2004 ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் இச்சாதனையை இவர் எட்டினார்.[2]

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று அரியானாவின் கைதால் மாவட்டத்தில் உள்ள குக்லா அருகே சாலை விபத்தில் சாகர்தீப் கவுர் இறந்தார். இறக்கும் போது, இவர் பஞ்சாப் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியில் இருந்தார். தடகளப் பயிற்சியாளர் சத்னம் சிங் இவரது கணவராவார். இவர்களுக்கு நீரத் சிங், அவ்னீத் சிங் ஆகிய இரு மகள்கள் இருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Olympian athelete [sic] dies in accident". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Bennett, Coleman & Co. Ltd.). 26 November 2016. http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Olympian-athelete-dies-in-accident/articleshow/55630020.cms. பார்த்த நாள்: 25 June 2017. 
  2. "Sagardeep KAUR (Athlete Profile)". World Athletics. பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகர்தீப்_கவுர்&oldid=3793161" இலிருந்து மீள்விக்கப்பட்டது