சாகரன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாகரன் (எ) கல்யாண் (முழுப்பெயர்: கல்யாணராமன்) (1975- பெப்ரவரி 11, 2007) தேன்கூடு பரணிடப்பட்டது 2018-05-19 at the வந்தவழி இயந்திரம் வலைப்பதிவுத் திரட்டியின் உருவாக்குனர் ஆவார். சாகரன் என்ற பெயரில் வலைப்பதிவராக அறியப்பட்டார். பெப்ரவரி 11, 2007 அன்று மாரடைப்பால் சவுதி அரேபியாவில் காலமானார். இவரது இறப்பு, இணையத் தமிழின் நுட்ப வளர்ச்சிக்கு பேரிழப்பாக தமிழ் வலைப்பதிவு ஆர்வலர்களால் கருதப்படுகிறது. தேன்கூடு திரட்டியின் நுட்பத்தை இந்திய மொழிகள் பலவற்றிலும் கொண்டு செல்ல எண்ணியிருந்தார் என்றும் தமிழ்த் தேவைகளுக்கான பல வலைமனைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்றும் அறிய முடிகிறது. தமிழ் தொடர்புடைய வலைமனைகளை உருவாக்கியது தவிர, ரியாத்தில் இருந்து செயல்பட்ட பல தமிழ் அமைப்புகளிலும் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி உள்ளார்.