சவ்வாதோர், பாகையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:33, 17 அக்டோபர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("Brasão_de_Salvador.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No source since 9 October 2018.)
சவ்வாதோர்
சால்வடோர்
நகராட்சி
O Municipio do
São Salvador da Bahia de Todos os Santos
புனிதர்களின் விரிகுடாவை காப்பாற்றும் புனித காப்பாளரின்
நகராட்சி
பெலூரின்கோ வரலாற்றுப் பகுதி (மேல்), லாசெர்டா மின்தூக்கி (நடுவில்), மாடலோ சந்தை (இடது)
பெலூரின்கோ வரலாற்றுப் பகுதி (மேல்), லாசெர்டா மின்தூக்கி (நடுவில்), மாடலோ சந்தை (இடது)
சவ்வாதோர் சால்வடோர்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): Capital da Alegria (மகிழ்ச்சியின் தலைநகரம்), Roma Negra (கருப்பு உரோமை) மற்றும் Bahia Judia (யூத விரிகுடா).
குறிக்கோளுரை: Sic illa ad arcam reversa est (இவ்வாறாக புறா பேழைக்கு மீண்டது)
பாகையா மாநிலத்தில் சவ்வாதோரின் அமைவிடம்
பாகையா மாநிலத்தில் சவ்வாதோரின் அமைவிடம்
நாடு Brazil
மண்டலம்வடகிழக்கு
மாநிலம் பாகையா
நிறுவப்பட்டது29 மார்ச்சு 1549
அரசு
 • மேயர்அன்டானியோ கார்லோசு மகளேசு நெடோ
பரப்பளவு
 • நகராட்சி706 km2 (273 sq mi)
ஏற்றம்8 m (26 ft)
மக்கள்தொகை (2010)
 • நகராட்சி2,676,606 (3வது)
 • அடர்த்தி3,791.2/km2 (9,819/sq mi)
 • பெருநகர்3,574,804 (7வது)
நேர வலயம்UTC-3
அஞ்சல் குறியீடு40000-000
தொலைபேசி குறியீடு+55 71
இணையதளம்சவ்வாதோர், பகையா

சவ்வாதோர் (காப்பாளர், உள்ளூர் வழக்கில் Salvador da Bahia, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [sawvaˈdoʁ (da baˈi.a)] (ஐரோப்பிய போர்த்துகேயத்தில் உச்சரிப்பு: சால்வடோர் IPA: [saɫvɐˈdoɾ (ðɐ bɐˈi.ɐ)]); வரலாற்றில்: São Salvador da Bahia de Todos os Santos, தமிழில்: "அனைத்துப் புனிதர்களின் விரிகுடாவை காப்பாற்றும் புனித காப்பாளரின் நகரம்")[1][2] பிரேசிலின் வடகிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமும் பாகையா மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.

இங்கு நடக்கும் எண்ணிக்கையில்லா வெளிப்புற விருந்துகளாலும் தெரு விழாக்களினாலும் (கார்னிவல்) சவ்வாதோர் பிரேசிலின் மனமகிழ்வுத் தலைநகரம் என்று அறியப்படுகிறது. குடியேற்றக்கால பிரேசிலின் தலைநகரமாக விளங்கிய சவ்வாதோர் அமெரிக்காக்களிலேயே மிகவும் பழைமையான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. பெரும்பான்மையான நேரங்களில் இது பாகையா, என்றே அறியப்பட்டிருந்தது; மத்திய இருபதாம் நூற்றாண்டு வரை அவ்வாறே நிலப்படங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் இதே பெயரிலுள்ள மற்ற நகரங்களிலிருந்து பிரித்துக் காட்டவே சவ்வாதோர் டா பாகையா எனப்பட்டது. பிரேசிலில் சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோவை அடுத்து மூன்றாவது மிகுந்த மக்கள் வாழும் நகரமாக சவ்வாதோர் விளங்குகிறது. 3.5 மில்லியன் மக்கள்தொகையுடன் நகரின் பெருநகர் பகுதி பிரேசிலின் கூடிய மக்கள்தொகை உடைய ஊரகப்பகுதிகளில் ஏழாவதாக உள்ளது.

உணவு, இசை மற்றும் கட்டிட வடிவமைப்பிற்காக இந்த நகரம் பெயர் பெற்றது. பிரேசிலின் வடகிழக்குப் பகுதியிலேயே மிகவும் செல்வச்செழிப்பு மிக்கதாக இதன் பெருநகர் பகுதி விளங்குகிறது. ஆபிரிக்கத் தாக்கத்தினால் சவ்வாதோர் பிரேசிலின் ஆபிரிக்க-பிரேசிலியப் பண்பாட்டு மையமாக உள்ளது. சவ்வாதோரின் வரலாற்று மையமான, பெலோரின்ஹோ போர்த்துக்கேய குடியேற்ற கட்டிட வடிவமைப்பிற்கு பெயர்பெற்றது; இங்கு 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டு வரையிலான வரலாற்றுச் சின்னங்களைக் காணலாம். 1985இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பெலோரின்ஹோவை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

Salஅத்திலாந்திக் பெருங்கடலிலிருந்து டோடெசு ஓசு சான்டோசு விரிகுடாவை பிரிக்கும் ஏறத்தாழ முக்கோண வடிவிலான சிறு மூவலந்தீவில் சவ்வாதோர் அமைந்துள்ளது. புனிதர் அனைவர் பெருவிழாவன்று கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த விரிகுடாவிற்கு அப்பெயரே சூட்டப்பட்டுள்ளது. சவ்வாதோர் ஓர் இயற்கைத் துறைமுகம் ஆகும்.

இந்த நகரத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாக நகரம் இரு உயரநிலைகளில் உள்ளது. மேல் நகரம் எனப்படும் Cidade Alta ("பிற நகரம்") கீழ் நகரம் எனப்படும் Cidade Baixa பகுதியிலிருந்து ஏறத்தாழ 85 m (279 அடி) உயரத்தில்,[3] உள்ளது. நகரத்தின் தேவாலயமும் பெரும்பாலான நிர்வாக கட்டிடங்களும் உயரமான நிலப்பகுதியில் அமைந்துள்ளன. பிரேசிலில் கட்டப்பட்ட அத்தகைய முதல் வசதி, எலெவேடர் லாசெர்டா எனப்படும் உயர்த்தி 1873 முதல் இவ்விருபகுதிகளையும் இணைக்கின்றது.

2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாக சவ்வாதோர் விளங்குகிறது. கூடுதலாக, 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளும் இங்கு நடந்துள்ளன.

மேற்சான்றுகள்

  1. Brickell, Margaret (July 1991). "If You Only Have a Day in Salvador da Bahia". Cruise Travel 13 (1): 25–26. http://books.google.com.au/books?id=ey0DAAAAMBAJ&pg=PA25&dq=sao+salvador+holy+savior+bahia&hl=en&ei=LF26TamNG9OE0QHS7tTIBQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CEsQ6AEwAA#v=onepage&q=sao%20salvador%20holy%20savior%20bahia&f=false. பார்த்த நாள்: 29 April 2011. 
  2. Graham, Sandra Lauderdale (2002). Caetana says no: women's stories from a Brazilian slave society. Cambridge: Cambridge University Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-89353-4. {{cite book}}: |access-date= requires |url= (help)
  3. Geography (PDF). Salvador, Brazil: Aloveworld. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 85-240-3919-1. பார்க்கப்பட்ட நாள் 2007-07-18.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவ்வாதோர்,_பாகையா&oldid=2588896" இலிருந்து மீள்விக்கப்பட்டது