சவுமியா சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சவுமியா சுவாமிநாதன்
Soumya Swaminathan
SSwaminathan10.jpg
சவுமியா சுவாமிநாதன், 2010
நாடுஇந்தியா
பிறப்பு1989 சனவரி 21
பாலக்காடு, இந்தியா
தலைப்புபெண்கள் சதுரங்க கிராண்டு மாசுட்டர் (2008)
எலோ தரவுகோள்2384 (மார்ச்சு 2016)

சவுமியா சுவாமிநாதன் (Soumya Swaminathan) என்பவர் ஓர் இந்தியப் பெண் சதுரங்க கிராண்ட்டு மாசுட்டர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். அர்கெந்தினாவின் பியூர்டோ மேட்ரினில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் சாம்பியன்பட்டத்தை 2009 ஆம் ஆண்டு சவுமியா வென்றார். இப்போட்டியில் தெய்சி கோரி மற்றும் பெட்டல் செம்ரே இல்டிசு ஆகியோருடன் சமநிலை புள்ளிகள் எடுத்து இவ்வெற்றியை ஈட்டினார் [1][2].

2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய இளையோர் பெண்கள் சாம்பியனாகவும் சவுமியா இருந்தார். 2011 ஆம் ஆண்டு சனவரியில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டுக்கான இந்தியப் பெண்கள் சாம்பியன் பட்டத்தையும் இவர் வென்றார் [3]. சென்னையில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பெண்கள் சாம்பியன் போட்டியிலும் வெற்றி பெற்றார் [4]. 2016 ஆம் ஆண்டில், மாசுகோ சதுரங்கப் போட்டியின் பெண்கள் பிரிவில் அனசுதேசியா போட்நாரூக் மற்றும் அலெக்சாண்ட்ரா ஓபொலின்டெசுவா ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார். சமநிலை முடிவு போட்டி ஆட்டத்தில் இரண்டாவதாக வந்தார் [5]. 2018 ஆம் ஆண்டு சூலை 26 முதல் ஆகத்து 4 வரை ஈரானின் அமாடனில் நடைபெற்ற ஆசிய அணி சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் கட்டாயத் தலை துணி அணிய மறுத்ததற்காக இவர் அப்போட்டியில் பங்கேற்காமல் விலகினார்.[6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vachier-Lagrave, Soumya win World Junior". ChessBase (2009-11-04). பார்த்த நாள் 20 February 2016.
  2. Soumya wins world junior girls title. The Times of India. 2009-11-04
  3. "WGM Soumya Swaminathan wins India Chess Championship". Susan Polgar Global Chess Daily News and Information. பார்த்த நாள் 2015-04-30.
  4. "Commonwealth Chess Championships 2012 – Tiviakov Champion, Lalith Babu awarded Commonwealth title". Chessdom (2012-12-02). பார்த்த நாள் 22 February 2016.
  5. Sagar Shah (2016-02-19). "Soumya shines in Moscow". ChessBase India. பார்த்த நாள் 9 April 2016.
  6. https://timesofindia.indiatimes.com/india/indian-chess-star-says-no-to-headscarf-pulls-out-of-event-in-iran/articleshow/64564662.cms

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுமியா_சுவாமிநாதன்&oldid=2959863" இருந்து மீள்விக்கப்பட்டது