உள்ளடக்கத்துக்குச் செல்

சவானி இரவீந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவானி இரவீந்திரா
இயற்பெயர்சவானி இரவீந்திரா கங்குர்தே தாண்டே
பிறப்பு22 சூலை 1989 (1989-07-22) (அகவை 35)
பிறப்பிடம்இரத்தினகிரி, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்கசல் (இசை), திரையிசை, இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடுதல்
இசைக்கருவி(கள்)குரல் பாட்டு
இணையதளம்www.savaniravindra.com

சவானி இரவீந்திரா, (Savani Ravindra) அல்லது சவானீ இரவீந்திரா, அல்லது சவானி ரவீந்திர கங்குர்தே தாண்டே (மராத்தி: सावनी रविंद्र ; பிறப்பு 22 சூலை 1989), மராத்தி இசைத் துறையில் ஒரு பாடகர் ஆவார்.

இளமை

[தொகு]

இரவீந்திரா மருத்துவர் இரவீந்திர கங்குர்தே மற்றும் மருத்துவர் வந்தனா கங்குர்தே ஆகியோரின் மகளாவார். இவர் புனே பெர்குசன் கல்லூரி பள்ளிப்படிப்பை முடித்தார். இவருக்கு வலுவான பாரம்பரிய பின்னணி உள்ளது.[1] பண்டாரிநாத் கோலாபுரியால் பாரம்பரிய குரல்களில் பயிற்சி பெற்றார். ரவி தத்தே என்பவரால் கஜலில்[2] பயிற்சி பெற்றார். 2011-இல் [3]. ஐ.டி.ஈ.அ. சரிகமா பாடகர்களில் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரில் சவனி ரவீந்திராவும் ஒருவர்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

பண்டிட் ஹிருதயநாத் மங்கேசுகருடன் சேர்ந்து,[4] சவானி புகழ்பெற்ற பாடகர்களான சுரேஷ் வாட்கர், அருண் தாதே, ரவீந்திர சாதே, ரவீந்திரன் ஜெயின், உத்தரா கேல்கர் மற்றும் ஸ்ரீதர் பாட்கே ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.[5]"ஆஷாயே", "கேன்வாஸ்" மற்றும் "அஜுனாஹி (மராத்தி) " [6] போன்ற இசைத் தொகுப்புகளில் பாடியுள்ளார். பிளாக் அண்ட் ஒயிட், [7] கசல் கா சஃபர் [8] மற்றும் குல்சார் பாத் பஷ்மின் கி போன்ற இசை நிகழ்ச்சிகளுக்காக இவர் பாடியுள்ளார்.[9]அஜாப் லக்னாச்சி கஜப் கோஷ்ட் [10] மற்றும் குனி கர் தேதா கா கர் போன்ற படங்களில் பாடியுள்ளார். இவரது மராத்தி பாடல்களில் ஒன்றான "து மாலா மி துலா குங்குனு லாக்லோ-ஹொனார் சுன் மி ஹியா கர்ச்சி-ஜீ மராத்தி", பாடகர் "மங்கேஷ் போர்கோன்கருடன்" பாடிய காதல் பாடல் ஆகும். சிறீரங் பாவேவுடன் இணைந்து மராத்தியில் ஒளிபரப்பான பிரபல தொலைக்காட்சி தொடரான 'கமலா' வின் தலைப்புப் பாடலையும் பாடியுள்ளார். மராத்தி திரைப்படமான 'சாய்ரத்' இல் பின்னணி பாடகராகவும் இருந்தார்.

விருதுகள்

[தொகு]

67ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருது சவானி ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது. ஆப்லா அவாஜ் "நாரி சக்தி விருதினை" பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "::Pandit Pandharinath Kolhapure". Pandharinathkolhapure.com. 16 February 1930. Archived from the original on 22 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Dattaprasad Ranade and Savaniee Ravindrra during the ghazal programme organised by Saptak in Nagpur". The Times of India. n.d. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014.
  3. "Zee Marathi announces the winner of IDEA Sa Re Ga Ma Pa". Indiantelevision.com. 24 October 2011. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014.
  4. "Hridaynath Mangeshkar – Singer, Music Director". MySwar. 26 October 1937. Archived from the original on 22 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Gulzar… Baat Pashmine Ki". Nicheentertainment.com. n.d. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014.
  6. "Savani Ravindra". Gomolo.com. n.d. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Black and White". Nicheentertainment.com. n.d. Archived from the original on 25 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Ghazal Ka Safar – A Musical Journey". Nicheentertainment.com. n.d. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014.
  9. "Kuni Ghar Deta Ka Ghar (2013) Cast and Crew | Actor Actress Director Of Kuni Ghar Deta Ka Ghar Marathi Movie". Gomolo.com. n.d. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Ajab Lagnachi Gajab Gosht (2010)". Gomolo.com. 24 September 2010. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவானி_இரவீந்திரா&oldid=4108218" இலிருந்து மீள்விக்கப்பட்டது