சவகர்லால் நேரு உயிரியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சவகர்லால் நேரு உயிரியல் பூங்கா
Jawaharlal Nehru Biological Park
Jawaharlal Nehru Biological Park, Bokaro Steel City.jpg
திறக்கப்பட்ட தேதி1989
இடம்பொகாரோ எஃகு நகரம், சார்க்கண்டு, இந்தியா

சவகர்லால் நேரு உயிரியல் பூங்கா (Jawaharlal Nehru Biological Park) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்திலுள்ள பொகாரோ எஃகு நகரில் அமைந்துள்ள ஒரு விலங்கியல் பூங்காவாகும். இந்திய எஃகு ஆணைய நிறுவனம் முழுமையாக இப்பூங்காவை நிர்வகித்து பராமரிக்கிறது. சவகர்லால் நேரு உயிரியல் பூங்கா மாநிலத்தின் மிகப்பெரிய விலங்கியல் தோட்டமாகும்.[1][2]

வரலாறு[தொகு]

1980 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இப்பூங்கா 1989 ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்தியாவின் முதலாவது பிரதம மந்திரி சவகர்லால் நேருவின் பெயர் இப்பூங்காவிற்கு சூட்டப்பட்டது.[1] பரணிடப்பட்டது 2021-05-11 at the வந்தவழி இயந்திரம்

முக்கியப் பகுதிகள்[தொகு]

சவகர்லால் நேரு உயிரியல் பூங்காவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. வெள்ளைப் புலிகள், வங்காளப் புலிகள் மற்றும் ஆசிய சிங்கங்கள் வளர்ப்பதற்கான சிறப்பு முயற்சிகள் இங்கு வெற்றிகரமாக உள்ளன. ஒரு செயற்கை ஏரியில் படகில் செல்ல வசதியும் செய்யப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Jawaharlal Nehru Biological Park". 3 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 January 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Tiger dies in Bokaro's Jawaharlal Nehru Biological park". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-02-16. https://archive.today/20130216070358/http://articles.timesofindia.indiatimes.com/2012-05-01/ranchi/31526060_1_zoo-authorities-heat-stroke-tiger. பார்த்த நாள்: 19 January 2013.