சல்பார்சனைடு கனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சல்பார்சனைடு கனிமங்கள் (Sulfarsenide minerals) என்பவை சல்பைடு கனிமங்கள் என்ற குழுவின் துணைக்குழுவைச் சேர்ந்த கனிமங்களாகும். கந்தகத்தை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு ஆர்சனிக்கு இங்கு எதிர்மின் அயனியாக வாய்ப்பாட்டில் இடம்பெறுகிறது[1]. ஆண்டிமனியும் பிசுமத்தும் உல்மேனைட்டில் உள்ளது போல ஆர்சனிக்கு தனிமத்திற்குப் பதிலாக இடம்பெறுகின்றன. சல்பார்சனைடின் வேதியியல் வாய்ப்பாடு சல்போ உப்பின் வேதி வாய்ப்பாட்டை ஒத்ததாக உள்ளது. இருப்பினும் இவற்றின் கட்டமைப்புகள் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. சல்போ உப்புகளில் ஓர் உலோக அயனி ஆர்சனிக்கை இடப்பெயர்ச்சி செய்கிறது[1]. தனா மற்றும் சிடரன்சு கனிம வகைப்பாடுகள் இரண்டிலும் சல்பார்சனைடுகள் சல்பைடுகள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளன[2][3].

எடுத்துக்காட்டுகள்[1][4][5]

  • ஆர்சனோபைரைட்டு குழு:
    • ஆர்சனோபைரைட்டு- FeAsS
    • கிளௌக்கோடாட்டு- (Co,Fe)AsS
    • குட்முன்டைட்டு- FeSbS
    • இலௌடைட்டு- CuAsS
    • அல்லோகிளாசைட்டு-(Co,Fe)AsS
  • கோபால்டைட்டு குழு
    • கோபால்டைட்டு- CoAsS
    • கெர்சுடோர்பைட்டு-NiAsS
    • உல்மானைட்டு-(Ni,Cu,Fe)(Sb,As,Bi)S

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Klein, Cornelis and Cornelius S. Hurlbut, 1985, Manual of Mineralogy, 20th ed., John Wiley and Sons, New York, p. 290 ISBN 0-471-80580-7
  2. http://webmineral.com/dana/II-2.shtml#2.1 Webmineral Dana
  3. http://webmineral.com/strunz/II.shtml Webmineral Strunz
  4. http://rruff.info/about/downloads/AM93_1183.pdf Hexiong Yang and Robert T. Downs, Crystal structure of glaucodot, (Co,Fe)AsS, and its relationships to marcasite and arsenopyrite, American Mineralogist, Volume 93, pages 1183–1186, 2008
  5. Palache, C., H. Berman, and C. Frondel (1944) Dana’s system of mineralogy, (7th edition), v. I, p. 296
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்பார்சனைடு_கனிமங்கள்&oldid=2593750" இலிருந்து மீள்விக்கப்பட்டது