அல்லோகிளாசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்லோகிளாசைட்டு (Alloclasite) என்பது (Co,Fe)AsS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கந்தக உப்புக் கனிமமாக வகைப்படுத்தப்படும் இக்கனிமம் ஆர்சனோபைரைட்டு குழுவின் ஒரு உறுப்பினராகக் கருதப்படுகிறது. ஒற்றைச் சரிவச்சுடன் கதிர்வீச்சுப் பண்புடன் கூடிய ஊசிப்படிகப் பட்டகத்தொகுதிகளாக அல்லோகிளாசைட்டு படிகமாகிறது. ஒளிபுகா உலோகத் தன்மையுடன் வெண்மையும் சாம்பலும் கலந்த நிறத்தில் கருப்பு நிற கீற்றுகள் கொண்டதாக இக்கனிமம் காணப்படுகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 5 என்ற கடினத்தன்மை மதிப்பும் 5.91–5.95. என்ற ஒப்படர்த்தியும், நொறுங்கும் பண்பும் இதனுடைய குறிப்பிடத்தகுந்த இயற்பியல் பண்புகளாகும் [1].

உருமேனியாவில் 1866 ஆம் ஆண்டு அல்லோகிளாசைட்டு கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது. கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து அல்லோகிளாசைட்டு என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. இக்கனிமத்தைப் போலவே தோற்றமளிக்கும் மார்கேசைட்டிலிருந்து அல்லோகிளாசைட்டு கனிமம் இதனுடைய படிக அமைப்பில் உள்ள தனித்தன்மை பிளவு மூலம் வேறுபடுத்தி அறியப்படுகிறது [2][1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லோகிளாசைட்டு&oldid=2592658" இருந்து மீள்விக்கப்பட்டது