சர்பானி பாசு
சர்பானி பாசு Sarbani Basu | |
---|---|
பணியிடங்கள் | யேல் பல்கலைக்கழகம் ஆரசு பல்கலைக்கழகம் இலண்டன் அரசி மேரி பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சென்னை பல்கலைக்கழகம் மும்பை பல்கலைக்கழகம் |
சர்பானி பாசு (Sarbani Basu) ஓர் இந்திய வானியற்பியலாளரும் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். இவர் பல்கலைக்கழகங்களின் வானியல் ஆராய்ச்சிக் கழகக் குழும இயக்குநர்களில் ஒருவராவார். இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினர் ஆவார்.
கல்வி
[தொகு]பாசு 1986 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டம் பெற்றுள்ளார்.[1] இவர் தன் பட்டமேற் படிப்பை பூனே சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகத்திலும் மும்பை பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். இவர் முனைவர் பட்டத்தை 1993 இல் பெற்றுள்ளார்.[1]
ஆராய்ச்சி
[தொகு]இவர் ஆர்கசு பல்கலைக்கழகத்தில் சேரும் முன் இலண்டன் அரசி மேரி பல்கலைக்கழகத்தில் 1993 இல் முதுமுனைவர் ஆய்வாளராகச் சேர்ந்துள்ளார்.[1] இவர் 1996 இல் இந்திய வானியல் கழகத்தின் எம். கே. வைணு பாப்பு பொற்பதக்கத்தைப் பெற்றார்.[2] இவர் 1997 இல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் உயராய்வு நிறுவன உறுப்பினராகச் சேர்ந்தார்.[1][3][4] இவர் 2000 இல் யேல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்து 2005 இல் பேராசிரியர் ஆனார்.[1] இவர் 2002 இல் கெல்மன் குடும்ப்ப் புல உறுப்பினர் ஆய்வுநல்கையை வென்றார். இவர் சூரியக் கட்டமைப்பிலும் இயங்கியலிலும் ஆர்வம் கொண்டவர். இதற்கு இவர் உடுக்கண அலைவுகளைப் பயன்படுத்துகிறார்.[5][6] சூரிய நடுக்கத் தலைக்கீழாக்கங்களைக் கண்காணித்து சூரியனுக்குள் நிகழும் செயல்முறைகளைத் தீர்மானிக்கிறார்.[7][8] இவர் ஒரு நூலில் சூரிய நடுக்கவியல் எனும் இயலை எழுதியுள்ளர்.[9] பாசு 200 அளவுக்கும் மேற்பட்ட சம வல்லுனர் மீள்பார்வையிட்ட ஆய்வுக் கட்டுரைகளை அறிவியல் ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். இவரது உயர் சான்று சுட்டெண் 82 ஆகும்.[10]
பாசு 2015 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்வனார்.[11] இவர் 2017 இல் வில்லியம் சாளினுடன் இணைந்து " வான் நடுக்கத் தரவு பகுப்பய்வு அடிப்படைகளும் நுட்பங்களும்" எனும் கட்டுரையை வெளியிட்டார்.[12] இவர் அமெரிக்க வானியல் கழகத்தின் ஜார்ஜ் எல்லேரி ஏல் பரிசைச் சூரிய அகக் கட்டமைப்பு ஆய்வுப் பங்களிப்புகளுக்காக 2018 இல் பெற்றார்.[13][14][15] இவர் வர்ஜீனியாவில் நடந்த மூன்றாண்டுக்கு ஒருமுறை புவி-சூரியன் மாநாட்டின் விருதைப் பெற்றுள்ளார்.[16] இவர் பள்ளிகளுக்குச் சென்று தன் ஆராய்ச்சியைப் பற்றி இளைஞரோடு விவாதிக்கிறார்.[17][18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Sarbani Basu, CV". www.astro.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
- ↑ "Professor M. K. Vainu Bappu Gold Medal | Astronomical Society of India". www.astron-soc.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
- ↑ "Sarbani Basu" (in en). Institute for Advanced Study. https://www.ias.edu/scholars/sarbani-basu.
- ↑ Kumar & Basu, Line Asymmetry of Solar p-Modes. doi:10.1086/307369/fulltext/39993.text.html. http://iopscience.iop.org/article/10.1086/307369/fulltext/39993.text.html.
- ↑ "Sarbani Basu". www.astro.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
- ↑ Basu, Sarbani (2016). "Global Seismology of the Sun". Living Reviews in Solar Physics 13 (1). doi:10.1007/s41116-016-0003-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:2367-3648. Bibcode: 2016LRSP...13....2B.
- ↑ "Sarbani Basu". Interseismology. Archived from the original on 2018-05-21. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
- ↑ Basu, Sarbani; Antia, H.M. (2008). "Helioseismology and solar abundances" (in en). Physics Reports 457 (5-6): 217–283. doi:10.1016/j.physrep.2007.12.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0370-1573. Bibcode: 2008PhR...457..217B.
- ↑ Basu, Sarbani (2014/01). Asteroseismology (in ஆங்கிலம்). Cambridge: Cambridge University Press. pp. 87–122. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/CBO9781139333696.005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139333696.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ "Sarbani Basu - Google Scholar Citations". scholar.google.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
- ↑ "Basu elected Fellow of AAAS". astronomy.yale.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Asteroseismic Data Analysis". Princeton University Press (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
- ↑ "Sarbani Basu wins 2018 George Ellery Hale Prize" (in en). YaleNews. 2018-01-11. https://news.yale.edu/2018/01/11/sarbani-basu-wins-2018-george-ellery-hale-prize.
- ↑ "2018 Hale Prize for Solar Astronomy Goes to Sarbani Basu". www.spaceref.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
- ↑ Writer, a Staff. "Yale Astronomer Sarbani Basu wins George Ellery Hale Prize" (in en). IndiaAbroad.com. https://www.indiaabroad.com/campus/yale-astronomer-sarbani-basu-wins-george-ellery-hale-prize/article_bc39b7b8-05fa-11e8-b016-b7951c3c5f82.html.
- ↑ "Home - TESS 2018". connect.agu.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
- ↑ School, Taft (2017-01-24), Morning Meeting, 1/24/17: Sarbani Basu, Professor of Astronomy, Yale University, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
- ↑ "4/30/18: Public Evening Lecture: Dr. Sarbani Basu, Yale Univ". www.as.arizona.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.