சர்பராஸ் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்பராஸ் அகமது (Sarfaraz Ahmad), இந்தியாவின் ஜார்கண்ட் சட்டமன்றத்தின் நடப்பு உறுப்பினரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் அரசியல்வாதியும் ஆவார். இவர் கண்டே சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1980 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக தேர்தெடுக்கப்பட்டவர். 2019ம் ஆண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.[1][2][3]1984ல் மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கிரீடீஹ் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவி விலகல்[தொகு]

1 சனவரி 2024 அன்று சொந்த காரணங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். [4][5][6]

விமர்சனங்கள்[தொகு]

நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்க இயக்குநரகத்தின் 7வது அழைப்பாணை அனுப்பிய ஒரு நாள் கழித்து, 1 சனவரி 2024 அன்று சர்ஃபராஸ் அகமது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் காண்டே சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட வசதியாக சர்பராஸ் அகமது தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியதாக மாநில பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr Sarfraz Ahmad(JMM):Constituency- GANDEY(GIRIDIH ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
  2. "Dr Sarfaraz Ahmad(Indian National Congress(INC)):Constituency- Gandey(Giridih) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
  3. "Gandey Election Results 2019 Live Updates: Dr Sarfraz Ahmad of JMM Wins". News18 (in ஆங்கிலம்). 2019-12-23. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
  4. JMM MLA Sarfaraz Ahmad Resigns From Jharkhand Assembly Citing Personal Reasons
  5. ஜார்க்கண்ட் எம்எல்ஏ ராஜினாமா
  6. ஜார்கண்ட் எம் எல் ஏ பதவி விலகல்: ஜார்கண்ட் அரசுக்கு நெருக்கடியா?
  7. JMM MLA’s surprise resignation sparks buzz as ED keeps up heat on CM Soren
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்பராஸ்_அகமது&oldid=3863015" இலிருந்து மீள்விக்கப்பட்டது