சரிவு சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரிவு சோதனை (ஆங்கிலம்:Slump Test) என்பது எலும்பியல் துறையில் நோயாளிகளுக்கு செய்யப்படும் ஒரு ஆய்வு ஆகும். அவர்களுக்கு பின் தொடை நரம்பு அழுத்தம் உள்ளதா என்று அறிய இது பயன்படுகிறது.

தேவை[தொகு]

தொடை நரம்பு அழுத்தம் உள்ளதா என்று அறிய இந்த ஆய்வு பயன்படுகிறது.

வழிமுறை[தொகு]

நோயாளி மேசையின் ஓரமாக உட்காரவேண்டும் பின் ஆய்வு செய்பவர் நோயாளியின் பக்கவாட்டில் நிற்கவேண்டும். சரிவு சோதனை என்பது பல படிநிலைகளை உள்ளடக்கியது. முதலில் நோயாளி முன்புறமாக குனியவேண்டும்.[1] பின் ஆய்வு செய்பவர் நோயாளியின் உடல் முன்புறமாக குனிய அழுத்தம் தரவேண்டும். அதன் பின் நோயாளி தன் தாடையை தம் மார்பு பகுதிக்கு அருகில் கொண்டுவர வேண்டும். பின்னர் நோயாளி தாமாகவே ஒரு முழங்கால் முட்டியை நீட்டவேண்டும் மேலும் அதே காலின் கணுக்கால் மேல்நோக்கி மடக்க வேண்டும். இந்த வழிமுறைகளில் எதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டாலே அதை நிறுத்தவேண்டும்.[2]

ஆய்வின் நுட்பம்[தொகு]

இந்த செயல்முறையினால் பின் தொடை நரம்பை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கம் அல்லது நீட்சி ஏற்படும்.

முடிவுகள்[தொகு]

சரிவு சோதனையின் மூலம் நோயாளிக்கு காலின் பின்புறத்தில் வலி ஏற்பட்டால் நரம்பு அழுத்தம் உள்ளது என அறியப்படும்.[1]

வரலாறு[தொகு]

சார்லஸ் லாஸ்க்யு என்பவரால் முதன்முதலில் இந்த சரிவு சோதனை அறியப்பட்டது.[3]

இவற்றை பார்க்க[தொகு]

சரிவு சோதனை செயல்முறையை விளக்கும் படங்கள் http://www.chiroaccess.com/assets/ChiroACCESS/Medium/Slump_Test.jpg பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Special Test for Orthopedic Examination. SLACK Incorporated. 
  2. Chad Starkey, PhD, LAT (2010). Orthopedic and Athletic Injury Examination Handbook (2 ). F.A. Davis. 
  3. "Slump Test".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிவு_சோதனை&oldid=3583922" இலிருந்து மீள்விக்கப்பட்டது